கணினி

ஹோம்பாட் மினி, ஐமேக் விலைகளை திடீரென மாற்றிய ஆப்பிள்

Update: 2023-01-21 05:29 GMT
  • ஆப்பிள் நிறுவனத்தின் ஹோம்பாட் மினி மற்றும் ஐமேக் மாடல்களின் விலை மாற்றப்பட்டு இருக்கிறது.
  • இரு சாதனங்களின் புதிய விலை விவரங்கள் ஏற்கனவே ஆப்பிள் வலைதளத்தில் அமலுக்கு வந்து விட்டன.

ஆப்பிள் நிறுவனம் கடந்த வாரம் இரண்டாம் தலைமுறை ஹோம்பாட் மாடலை அறிமுகம் செய்தது. இத்துடன் மேக்புக் ப்ரோ மற்றும் புது மேக் மினி மாடல்களும் அறிமுகம் செய்யப்பட்டன. ஆப்பிள் ஏற்கனவே விற்பனை செய்து வரும் ஹோம்பாட் மினி மற்றும் 24 இன்ச் ஐமேக் மாடல்களின் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது.

இந்தியா உள்பட சர்வதேச சந்தையில் விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது. மேலும் உயர்த்தப்பட்ட புது விலை விவரங்கள் ஏற்கனவே ஆப்பிள் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் மாற்றப்பட்டு வட்டது. எனினும், ஆப்பிள் விற்பனையாளர்கள் மற்றும் ஆன்லைன் தளங்களில் இன்னமும் பழைய விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஆப்பிள் ஹோம்பாட் மினி 2020 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் உண்மை விலை ரூ. 9 ஆயிரத்து 990 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. தற்போது இதன் விலை ரூ. 1000 உயர்த்தப்பட்டு ரூ. 10 ஆயிரத்து 990 என மாறி இருக்கிறது. ஹோம்பாட் மினி மாடலில் S5 மற்றும் U1 சிப்செட்களுடன் நான்கு மைக்ரோபோன்கள் வழங்கப்பட்டு உள்ளன.

24-இன்ச் ஐமேக் மாடல் 2021 ஏப்ரல் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. இது 8 ஜிபி / 16 ஜிபி ரேம் ஆப்ஷன்களில், 8-கோர் சிபியு, 7-கோர் ஜிபியு மற்றும் 8-கோர் சிபியு + 8 கோர் ஜிபியு ஆப்ஷன்களில் கிடைக்கிறது. ஐமேக் மாடலின் அனைத்து வெர்ஷன்களின் விலையும் ரூ. 10 ஆயிரம் உயர்த்தப்பட்டு இருக்கிறது.

விலை உயர்வின் படி பேஸ் வேரியண்ட் விலை ரூ. 1 லட்சத்து 29 ஆயிரத்து 900 என்றும் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 1 லட்சத்து 49 ஆயிரத்து 900 என மாறி இருக்கிறது.

Tags:    

Similar News