கணினி

ஏர்பாட்ஸ்-இல் இப்படி ஒரு வசதியா? ஆப்பிள் காப்புரிமையில் லீக் ஆன தகவல்!

Published On 2023-04-10 14:38 IST   |   Update On 2023-04-10 14:38:00 IST
  • அமெரிக்க காப்புரிமை மற்றும் டிரேட்மார்க் அலுவலகம் சார்பில் இந்த காப்புரிமை ஆப்பிள் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு இருக்கிறது.
  • இதன் மூலம் ஏர்பாட்ஸ்-இல் பயனர் இசையை கேட்கும் அனுபவம் முற்றிலும் புதிதாக மாறும்.

ஆப்பிள் நிறுவனம் அமெரிக்காவில் பெற்றுருக்கும் காப்புரிமையில், புதிய தொழில்நுட்பம் பற்றிய விவரங்கள் தெரியவந்துள்ளது. இந்த தொழில்நுட்பம் அந்நிறுவனம் ஏற்கனவே வழங்கி வரும் ஸ்பேஷியல் ஆடியோ அம்சத்தை மேம்படுத்தும்.

மெஷர்மண்ட் ஆஃப் விர்ச்சுவல் லிசனிங் என்விரான்மெண்ட் (measurement of virtual listening environment) என்று அழைக்கப்படும் புதிய தொழில்நுபட்பம் ஏர்பாட்ஸ் ப்ரோ-வில் உள்ள பிரத்யேக சிப்செட்களை பயன்படுத்துகிறது. பின் சாஃப்ட்வேர் ஆக்மெண்டேஷன் மற்றும் ஆடியோ சிக்னல் பிராசஸருடன் இணைத்து பயனர் இருக்கும் சூழலுக்கு ஏற்ற வகையில் ஆடியோ அனுபவத்தை மேம்படுத்துகிறது.

 

அமெரிக்க காப்புரிமை மற்றும் டிரேட்மார்க் அலுவலகம் சார்பில் இந்த காப்புரிமை ஆப்பிள் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு இருக்கிறது. இது ஆடியோ பாராமீட்டர்களை அட்ஜஸ்ட் செய்கிறது. இதன் மூலம் ஏர்பாட்ஸ்-இல் பயனர் இசையை கேட்கும் அனுபவம் முற்றிலும் புதிதாக மாறும்.

திறந்தவெளி, அரங்கம், வீட்டின் உள்புறம், பொது போக்குவரத்து வாகனங்கள் என பல்வேறு வகையான சூழலுக்கு ஏற்ற வகையில் புதிய தொழில்நுட்பம் பயனருக்கு ஆடியோ அனுபவத்தை மேம்படுத்தி கொடுக்கும். இது போன்ற அம்சம் பயனர் இசையை ஆழ்ந்து அனுபவிக்க செய்கிறது.

மற்ற காப்புரிமை விவரங்களை போன்றே புதிய தொழில்நுட்பம் எப்போது பயனருக்கு வழங்கப்படும் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. எனினும், இந்த அம்சம் ஏர்பாட்ஸ் எதிர்கால மாடல்களில் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

Tags:    

Similar News