கணினி

இணையத்தில் லீக் ஆன அமேசான் பிரைம் லைட் விவரங்கள்

Published On 2023-01-16 04:57 GMT   |   Update On 2023-01-16 04:57 GMT
  • அமேசான் பிரைம் ஒடிடி சேவையின் புது சந்தா உருவாக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
  • புதிய அமேசான் பிரைம் லைட் விலை சற்றே குறைவாக நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

அமேசான் நிறுவனம் இந்திய சந்தையில் தனது பிரைம் சந்தாவை ஓரளவு குறைந்த விலையிலேயே வழங்கி வருகிறது. அமேசான் பிரைம் சந்தாவில் ஸ்டிரீமிங் மட்டுமின்றி ஒரே நாளில் டெலிவரி மற்றும் இலவச அதே நாளில் டெலிவரி போன்ற சேவைகளையும் வழங்கி வருகிறது. இந்த நிலையில், அமேசான் நிறுவனம் பிரைம் லைட் பெயரில் மற்றொரு சந்தா முறையை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி அமேசான் பிரைம் லைட் சந்தா ஆண்டிற்கு ரூ. 999 எனும் விலையில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. ஏற்கனவே அமேசான் பிரைம் சந்தா இதே விலையில் வழங்கப்பட்டு வந்தது. எனினும், விலை உயர்வு காரணமாக இது ரூ. 1,499 ஆக மாறி இருக்கிறது. தற்போது புது சந்தா முறை அதன் பீட்டா வெர்ஷனில் தேர்வு செய்யப்பட்ட சில பயனர்களிடம் சோதனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதில் இரண்டு நாட்களில் இலவச டெலிவரி மற்றும் ஒரே நாளில் டெலிவரி போன்ற சேவைகள் சேர்க்கப்பட்டு இருக்கும். அந்த வகையில், இரண்டு நாட்களுக்குள் டெலிவரி வேண்டும் எனில், பயனர்கள் அதற்கான கட்டணத்தை செலுத்த நேரிடும் என்றே தெரிகிறது. இரண்டு நாட்களுக்கு இலவச டெலிவரி மட்டுமின்றி அமேசான் பிரைம் லைட் சந்தாவின் கீழ் பிரைம் வீடியோ தரவுகள் அனைத்தையும் பார்க்கும் வசதி வழங்கப்படுகிறது.

எனினும், குறைந்த விலை கொண்ட சேவையில் பயனர்கள் தரவுகளை HD தரத்தில் மட்டுமே ஸ்டிரீம் செய்ய முடியும். இது தவிர ஸ்டிரீம்களின் இடையில் வரும் விளம்பரங்களையும் பார்க்க நேரிடும். அந்த வகையில் புது அமேசான் பிரைம் லைட் விளம்பரங்கள் அடங்கிய குறைந்த விலை சந்தா என எடுத்துக் கொள்ளலாம். அமேசான் பிரைம் லைட் சந்தா ஒரே சமயத்தில் இரு சாதனங்களில் மட்டுமே பயன்படுத்த முடியும். இதில் ஒன்று நிச்சயம் மொபைல் போனாகவே இருக்க வேண்டும்.

புதிய அமேசான் பிரைம் லைட் அறிமுகமானால், அமேசான் பிரைம் சந்தா முறையின் விலை ஆண்டிற்கு ரூ. 1499 என்றும், காலாண்டிற்கு ரூ. 459, மாதத்திற்கு ரூ. 179 மற்றும் அமேசான் பிரைம் லைட் சந்தா ஆண்டுக்கு ரூ. 999 என நிர்ணயம் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

Tags:    

Similar News