தொழில்நுட்பம்
ஜெப் ஸ்மார்ட் பாட்

ரூ. 3 ஆயிரம் பட்ஜெட்டில் ஜெப்ரானிக்ஸ் அலெக்சா ஸ்மார்ட் ஸ்பீக்கர் அறிமுகம்

Published On 2021-03-30 10:13 GMT   |   Update On 2021-03-30 10:16 GMT
ஜெப்ரானிக்ஸ் நிறுவனம் புதிய அலெக்சா ஸ்மார்ட் ஸ்பீக்கர் சாதனத்தை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்தது.


ஜெப்ரானிக்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் ஜெப் ஸ்மார்ட் பாட் எனும் பெயரில் புதிய அலெக்சா ஸ்மார்ட் ஸ்பீக்கரை அறிமுகம் செய்தது. அலெக்சா வசதி கொண்ட ஜெப் ஸ்மார்ட் பாட் ஸ்பீக்கர் மூலம், இல்லத்தை ஸ்மார்ட் இல்லமாக மாற்ற முடியும். டிவி, ஏசி, போன்ற ஸ்மார்ட் தொழில்நுட்பம்-அல்லாத சாதனங்களையும் IR ரிமோட் மூலம் கட்டுப்படுத்தலாம்.

புதிய ஜெப் ஸ்மார்ட் பாட் இந்தியாவின் முன்னணி அக்சஸரி பிராண்டான ஜெப்ரானிக்ஸ்-இன் முதல் ஸ்மார்ட் ஸ்பீக்கர் ஆகும்.  இது சாதனங்களைத் தொலைவில் இருந்து கட்டுப்படுத்தக்கூடியது. இத்துடன் குரல் வழி (வாய்ஸ் அசிஸ்டென்ஸ்) மூலம் இயக்க உதவும் அலெக்சா சேவையை கொண்டுள்ளது.

இதன் மூலம் செய்திகளைக் கேட்கலாம், ஆடியோ புத்தகத்தை இயக்கலாம். மேலும் இதுபோன்ற பல்வேறு விஷயங்கள் உள்ளன. ஜெப் ஸ்மார்ட் பாட் ஸ்மார்ட் ஸ்பீக்கர் அளவில் மிக சிறியதாக இருந்தாலும், 360 டிகிரி IR பிளாஸ்டர் அம்சத்தைக் கொண்டிருப்பதால், பலதரப்பட்ட வேலைகளைச் செய்யும்.



இது IR இயக்க வசதி உள்ள எந்த சாதனத்தையும் தொலைவிலிருந்து கட்டுப்படுத்தலாம். குறிப்பாக இதில் டூயல் ஃபார்-ஃபீல்ட்  மைக் மற்றும் இன்-பில்ட் அலெக்சா, ஜெப் (ZEB) செயலியுடனான இணக்கும் வசதி உள்ளது. இந்த செயலி பிளேஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோரில் கிடைக்கிறது.

ஜெப் ஸ்மார்ட் பாட் ஸ்மார்ட் ஸ்பீக்கரானது உயர் தரமான டூயல் ஃபார்-ஃபீல்ட்  மைக் சப்போர்ட் கொண்டிருக்கிறது. இன்-பில்ட் அலெக்சா வசதி இருப்பதால் குரல் வழியே பலவற்றை செய்யலாம். நீங்கள் குரல் கட்டுப்பாடுகளைப் பயன்படுத்த விரும்பினால் “அலெக்சா” என்ற ஒற்றை வார்த்தையை மட்டும் சொன்னாலே போதுமானது.

இந்தியாவில் புதிய ஜெப் ஸ்மார்ட் பாட் ஸ்பீக்கர் விலை ரூ. 3699 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது.
Tags:    

Similar News