வழிபாடு

செல்வ செழிப்போடு இருக்க லட்சுமி குபேர வழிபாடு...!

Published On 2025-10-16 11:00 IST   |   Update On 2025-10-16 11:00:00 IST
  • குபேரன் நீங்காத செல்வத்தை அள்ளித் தருபவர்.
  • செல்வத்தையும், வளத்தையும் கொடுக்கும் அதிபதியாக விளங்குகின்றார் குபேரன்.

செல்வத்துக்கு அதிபதியான லட்சுமியையும், அதனை காக்கும் குபேரனையும் தீபாவளி திருநாளில் ஒரு சேர தரிசித்து வந்தால், அவர்கள் வாழ்வில் செல்வம் செழிக்கும்.

ஸ்ரீ லட்சுமி குபேரன் வாழப்பிறந்தவனுக்கு வடக்கு என்ற பழமொழி உருவானது. குபேரன் நீங்காத செல்வத்தை அள்ளித் தருபவர். ஆனால் செல்வத்துக்கு கடவுள் மகாலட்சுமி. செல்வத்தை பக்தர்களுக்கு முறையாக பகிர்ந்து அளிக்க அவர் பணித்தார். எனவே தான் குபேரன் லட்சுமி குபேரன் என்று அழைக்கப்படுகிறார்.

குபேர பூஜையினை புதன் ஓரையில் செய்வது மிகுந்த செல்வ வளத்தினை தரும். மேலும் குபேரன் பிறந்த நட்சத்திரமாக கருதப்படும் பூச நட்சத்திரத்தன்றோ அல்லது வியாழக்கிழமை நாட்களிலோ வழிபாடு செய்வது மிகுந்த நன்மை தரும்.

குபேரனுடைய நடத்தையை மெச்சி, எட்டு திசைகளில், ஒன்றான வடக்கு திசைக்கு அதிபதியாக குபேரனை நியமனம் செய்தார் பார்வதி தேவி. செல்வத்தையும், வளத்தையும் கொடுக்கும் அதிபதியாக விளங்குகின்றார் குபேரன். அவரை வணங்கினால், செல்வம் பெருகும், வளம் கொழிக்கும் என்பது நம் முன்னோர்கள் நம்பிக்கையாகும்.

Tags:    

Similar News