புதுச்சேரி

புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடந்த திருமணத்தை முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. ஆகியோர் நடத்தி வைத்தனர்.

காங்கிரஸ் அலுவலகத்தில் நடந்த திருமணம்- ராகுல்காந்தி வாழ்க என்ற கோஷத்துடன் தாலி கட்டினார்

Published On 2023-08-16 10:50 IST   |   Update On 2023-08-16 10:50:00 IST
  • ராகுல்காந்தி வாழ்க... வாழ்க... என கூறியபடி பிரகாஷ் மணமகள் கழுத்தில் தாலி கட்டினார்.
  • ராகுல்காந்தி முன்னிலையில் இந்த திருமணம் நடைபெற வேண்டுமென இருவருமே விரும்பினர்.

புதுச்சேரி:

புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் விழுப்புரம் மாவட்டம் வி.புதூர் கிராமத்தை சேர்ந்த கட்சி பிரமுகர் பிரகாஷ் மற்றும் புதுச்சேரி ஆண்டியார் பாளையத்தை சேர்ந்த அன்பரசி ஆகியோரது திருமணத்தை முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. ஆகியோர் நடத்தி வைத்தனர்.

இதில் ராகுல்காந்தி வாழ்க... வாழ்க... என கூறியபடி பிரகாஷ் மணமகள் கழுத்தில் தாலி கட்டினார்.

அப்போது மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. கூறியதாவது:-

ராகுல்காந்தி முன்னிலையில் இந்த திருமணம் நடைபெற வேண்டுமென இருவருமே விரும்பினர்.

ஆனால் அதற்கான சூழல் அமையாத நிலையில் தற்போது கட்சி அலுவலகத்தில் அனைவரது ஆதரவோடு திருமணம் செய்து கொண்டுள்ளனர் என்றார்.

இப்போது ஆட்சியில் இருக்கிறவர்கள் நாட்டின் சுதந்திரத்தை தாங்கள் தான் கொண்டு வந்த மாதிரி பாவனை காட்டுகிறார்கள். ஆனால் சுதந்திரம் பெற உயிர் தியாகம் செய்தது காங்கிரஸ் கட்சி மட்டும்தான் என்று கூறினார். 

Tags:    

Similar News