புதுச்சேரி
கோப்பு படம்.
குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட வாலிபர்கள் கைது
- குடித்துவிட்டு ரகளையில் ஈடுபட்ட இளைஞர்களை பிடித்து விசாரித்தனர்.
- அவர்களை பிடித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
புதுச்சேரி:
மடுகரை பகுதியில் திரவுதியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று கொண்டிருந்தது. மடுகரை போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கம்பத்தம் தெருவில் வாலிபர்கள் குடித்துவிட்டு, சாலையில் செல்லும் பொதுமக்களிடம் தகாத வார்த்தைகளில் திட்டியுள்ளனர். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று குடித்துவிட்டு ரகளையில் ஈடுபட்ட இளைஞர்களை பிடித்து விசாரித்தனர்.
அவர்கள் மடுகரை ராம்ஜீநகர் பகுதியை சேர்ந்த விஜயகுமார் (22) மற்றும் சொர்ணாவூர் கீழ்பாதி பகுதியை சேர்ந்த சுரேந்தர் (23) என்பது தெரியவந்தது. அவர்களை பிடித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.