புதுச்சேரி

கரியமாணிக்கத்தில் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள போலீசார்.

கோஷ்டி மோதலில் போலீஸ் மீது கல்வீசி தாக்குதல்

Published On 2023-05-11 09:16 GMT   |   Update On 2023-05-11 09:16 GMT
தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்-பதட்டம்

புதுச்சேரி:

 புதுவை அருகே கரியமாணிக்கம் சந்திப்பில்  9மணி அளவில் நெட்டப்பாக்கம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

 கரியமாணிக்கம் காலனி பகுதியில் அப்பகுதியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்வர்கள் திடீரென ஒன்று கூடினர். உடனடியாக ரோந்து போலீசார், உதவி ஆய்வாளர் கதிரேசனிடம் தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக உதவி ஆய்வாளர் கதிரேசன் போலீஸ் வாகனத்தில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். அப்பகுதியில் கரியமாணிக்கம் பகுதியை பகுதியை சேர்ந்த ரஜினி குமார் மற்றும் பெரியாண்டவர் தலைமையில் 2 குழுக்கள் திரண்டு நின்றனர்.

 மேலும் அதே பகுதியை சேர்ந்த நரேந்திரன் தலைமையில் மற்றொரு கும்பலும் திரண்டிருந்தனர். இரு குழுக்களில் உள்ள நபர்களிடையே மாற்றி மாற்றி ஒருவரையொருவர் தகாத வார்த்தைகளால் திட்டிக் கொண்டிருந்தனர். 20-கும் மேற்பட்டவர்கள் ஒன்றுகூடி பொதுமக்கள் செல்லும் வழியான கரி யமாணிக்கம் தவளக்குப்பம் சாலையில் தடையை ஏற்படுத்தினர்.

 நெட்டப்பாக்கம் உதவி ஆய்வாளர் கதிரேசன் அவர்களை கலைந்துபோகக் கூறி எச்சரிக்கை செய்தார். ஆனால் இருதரப்பினரும் கலைந்துபோகாமல் பொது மக்களுக்கு தொந்தரவு செய்யும் வகையில் ஈடுபட்டனர்.

போலீசாரை அவர்களது கடமையை செய்யவிடாமல் தொடர்ந்து இடையூறு செய்தனர், பின்னர். போலீசாரை தகாத வார்த்கைளால் திட்டியதோடு, மேற்கொண்டு கற்கள் மற்றும் மரக்கட்டைகளை கொண்டு போலீசாரை தாக்கி வன்முறையில் ஈடுப்பட்டு போலீஸ் வாக னத்தையும் சேதப்படுத்தினர், இதில் சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன், தலைமை காவலர் பிரதீஸ் மற்றும் காளிதாஸ் ஆகியோரை கற்களால் தாக்கியதில் காயம் அடைந்தனர்.

 இதை தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தினர். கலவரத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் அடையாளம் கண்டனர்.

அப்பகுதியை சேர்ந்த ரஜினிகுமார்(34), பெரியாண்டவர்(42), கிருஷ்ணகுமார்(35), கிருஷ்ணராஜ்(30), நரேந்திரன்(35), விநாயக மூர்த்தி(37), சத்திய மூர்த்தி(23), பாரதிராஜா(33), கதிரவன்(27), வீரன்(37), பாக்கியராஜ் (35), பவாணி சங்கர்(21), மற்றும் நரேஷ்(27), ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து தலை மறைவாக உள்ள அனை வரையும் தேடி வருகின்றனர்.

 தொடர்ந்து அங்கு பதட்டமான நிலை எற்பட்டுள்ள தால் கரிய மாணிக்கம் பகுதியில் 20-கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News