புதுச்சேரி

பிம்ஸ் மருத்துவமனை அதி நவீன அவசர சிகிச்சை மருத்துவ பிரிவு மற்றும் புதுப்பிக்கப்பட்ட கலையரங்கத்தை முதல்-அமைச்சர் ரங்கசாமி திறந்து வைத்தார்.

அதிநவீன அவசர சிகிச்சை பிரிவு, புதுப்பிக்கப்பட்ட கலையரங்கம்

Published On 2023-05-13 15:01 IST   |   Update On 2023-05-13 15:01:00 IST
  • முதல்-அமைச்சர் ரங்கசாமி திறந்து வைத்தார்.
  • நம் மாணவர்கள் பிம்ஸ் மருத்துவ கல்லூரியில் மருத்துவ படிப்பில் சேர ஆர்வம் காட்டுகின்றனர்.

புதுச்சேரி:

பிம்ஸ் மருத்துவ மனையில் அதிநவீன அவசர சிகிச்சை மருத்துவ பிரிவு மற்றும் புதுப்பிக்கப்பட்ட கலையரங்கத்தின் திறப்பு விழா  நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் அனில் பூர்த்தி வரவேற்றார். சேர்மன் பிலிப், முதன்மை நிர்வாக ஆலோசகர் பாபு டேனியல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு திறந்து வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

புதுவை கல்வி மற்றும் சுகாதாரத்தில் முதன்மை மாநிலமாக திகழ்கிறது. நம் மாணவர்கள் பிம்ஸ் மருத்துவ கல்லூரியில் மருத்துவ படிப்பில் சேர ஆர்வம் காட்டுகின்றனர்.

மாணவர்கள் உயர்கல்வி பெற தேவையான அனைத்து வசதிகளையும் இந்த அரசு செய்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

காலாபட்டு எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரம் பேசினார். நிகழ்ச்சியில், மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் தலைவரும் கோட்டயம் மறை மாவட்டத்தின் மலங்கரா ஆர்தோடக்ஸ் சிரியன், திருச்சபையின் பேராயர் டாக்டர் யுகானன் மார் டயாஸ்கோர்ஸ், சென்னை மறை மாவட்டத்தின் மலங்கரா ஆர்தோடக்ஸ், சிரியன் திருச்சபையின் பேராயர் ஜீவர்கீஸ் மார் ப்ளாக்ஸ்னஸ், புதுவை சுகாதாரத்துறை செயலர் உதயகுமார், மெடோ ஃபார்ம் இயக்குனர் பன்னாலால் சோர்த்தியா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

முடிவில் மருத்துவ கண்காணிப்பாளர் பீட்டர் மனோகரன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News