புதுச்சேரி

சொர்ணாகர்ஷண பைரவர் திருக்கல்யாணம் உற்சவம் நடந்த காட்சி. விழாகுழு தலைவர் ராயல் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர் 

சொர்ணாகர்ஷண பைரவர் திருக்கல்யாணம்

Published On 2023-05-13 15:01 IST   |   Update On 2023-05-13 15:01:00 IST
  • சாமிகள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.
  • முடிவில் பக்தர்களுக்கு சமபந்தி விருந்து வழங்கப்பட்டது.

புதுச்சேரி:

தவளக்குப்பம் அண்ணா நகரில் தனி கோவில் அமைந்துள்ள சொர்ணா கர்ஷண பைரவர் மற்றும் அஷ்ட பைரவர்கள் கோவிலில் அஷ்டமி திருவிழா கடந்த 5 நாட்களாக நடைபெற்றது.

இதில் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் உற்சவம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட சொர்ண பைரவி மற்றும் சொர்ணகர்ஷண சாமி களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று மாங்கல்யம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

விழாவில் புதுவை சிவ.குமாரசாமி தேசிக பரமாச்சாரியார் சாமிகள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். இதற்கான ஏற்பாடு களை விழா குழு தலைவர் ராயல், அண்ணாநகர் மற்றும் ஊர் வலப்பம் கிராம வாசிகள் செய்தனர். சாமி வீதியுலா நிகழ்ச்சி நடந்தது.

முடிவில் பக்தர்களுக்கு சமபந்தி விருந்து வழங்கப்பட்டது.

Tags:    

Similar News