புதுச்சேரி
சூரிய கிரகணத்தையொட்டி புதுவை மணக்குள விநாயகர் கோவில் நடை மூடப்பட்டதால் பக்தர்கள் வெளியில் இருந்தே வழிபட்ட காட்சி.

சூரிய கிரகணத்தையொட்டி புதுவை கோவில்கள் நடைமூடல்

Published On 2022-10-25 07:24 GMT   |   Update On 2022-10-25 07:24 GMT
  • புதுவையில் புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோவிலில் பகல் 11.30 மணிக்கு நடை மூடப்பட்டது.
  • மாலை 7 மணி அளவில் கோவில் நடை திறக்கப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

புதுச்சேரி:

சூரிய கிரகணம் இன்று பிற்பகல் 2.28-க்கு தொடங்கி மாலை 6.30-க்கு முடிவடைகிறது. இதனால் நாடு முழுவதும் கோவில்கள் நடை மூடப்பட்டது.

புதுவையில் புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோவிலில் பகல் 11.30 மணிக்கு நடை மூடப்பட்டது. கோவிலுக்குள் இருந்த பக்தர்களுக்கு மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

மற்ற பக்தர்களை மாலையில் வருமாறு அறிவுறுத்தி கோவில் பாதுகாவலர்கள் அனுப்பினர்.

மாலை 7 மணி அளவில் கோவில் நடை திறக்கப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதேபோல் புதுவையில் உள்ள கோவில்களின் நடை மதியம் 12 மணிக்குள் மூடப்பட்டது.

Tags:    

Similar News