புதுச்சேரி
கோப்பு படம்.
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை
- 2 மோட்டார் சைக்கிள்கள், செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
- 4 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.
புதுச்சேரி:
லாஸ்பேட்டை தாகூர் கல்லூரி விளையாட்டு மைதா னத்தில் பள்ளி, கல்லூரி மாண வர்களுக்கு கஞ்சா விற்பனை செய் யப்படுவதாக போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் லாஸ்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் அன்சர் பாஷா தலை மையில் போலீசார் அங்கு விரைந்து சென்று கஞ்சா விற்ப னையில் ஈடுபட்ட 4 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்கள் விழுப்புரம் மாவட்டம் ராவுத்தான்குப்பம் கோபிநாத் (வயது 24), சந்தோஷ் (21), மனோஜ் (23), தினேஷ் சர்மா (25) என்பது தெரியவந்தது. இதைய டுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்க ளிடம் இருந்து 17 கஞ்சா பொட்டலங்கள், 2 மோட்டார் சைக்கிள்கள், செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.