புதுச்சேரி

காரைக்காலில் மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம் அபராதம்: போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை

Published On 2023-09-23 13:28 IST   |   Update On 2023-09-23 13:28:00 IST
  • மதுபோதையில் வாகனம் ஓட்டாமல் இருக்க, போக்குவரத்து போலீசார், தீவிர விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
  • போலீசார் காரைக்காலின் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்ட னர்.

புதுச்சேரி:

புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டத்தில் அண்மைக் காலமாக, இரவு 7 மணி முதல் 11 மணி வரை மதுபோதையில் வாகனம் ஓட்டுவதால், சாலை விபத்துகள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. அதனால், மதுபோதையில் வாகனம் ஓட்டாமல் இருக்க, போக்குவரத்து போலீசார், தீவிர விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, சாலையில் செல்லும் சந்தேகப்படும் படியான நபர்களை சுவாச பரிசோ தனை கருவி (பிரீத் அனலை சர்) மூலம் பரிசோதனை செய்து, மது அருந்தி வாகனம் ஓட்டினால், அவரது புகைப்படத்துடன், கோர்ட்டுக்கு சார்ஜ்சீட் அனுப்பி வைத்து ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து வருகின்றனர்.

இத்திட்டம் ஏற்கனவே இருந்தாலும், இரவுநேர விபத்தை தடுக்கும் பொருட்டு தீவிரப்படுத் தப்பட்டுள்ளது. அதன்படி, சீனியர் போலீஸ் சூப்பி ரண்டு (பொறுப்பு) நிதின் கவ்ஹால்ரமேஷ் உத்தர வின் பேரில், காரைக்கால் போக்குவரத்து இன்ஸ் பெக்டர் மரிகிறிஸ்டியன் பால் மற்றும் போக்குவரத்து போலீசார் காரைக்காலின் பல்வேறு இடங்களில் சோதனை மேற் கொண்டனர். இந்த பரிசோதனை இனி அடிக்கடி நடைபெறும் என்பதால், வாகன ஓட்டி கள் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக் கூடாது. அதிவேக மாக வும் வாக னம் ஓட்டக்கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ள னர்.

Tags:    

Similar News