புதுச்சேரி

கோப்பு படம்.

பா.ஜனதா கூட்டணியில் இருந்து ரங்கசாமி விலக வேண்டும்

Published On 2023-05-14 12:47 IST   |   Update On 2023-05-14 12:47:00 IST
  • பா.ஜனதா ஆட்சிக்கு எதிராக இருந்த எதிர்ப்பு உணர்வு தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற வாய்ப்பளித்திருக்கிறது.
  • புதுவை மக்களின் பாரம்பரியத்தை பாதுகாக்க ரங்கசாமி பா.ஜனதா கூட்டணியிலிருந்து இருந்து உடனே விலக வேண்டும்.

புதுச்சேரி:

மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்டு புதுவை மாநில செயலாளர் ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தென்னிந்தியாவின் கரையாக பா.ஜனதா கூட்டணி ஆட்சி புதுவை மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது. பா.ஜனதா கட்சிக்கு அரசியல் நேர்மையும், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையும் எப்போதும் இருந்ததில்லை. கர்நாடக மக்கள் சட்டமன்றத் தேர்தலில் பா.ஜனதாவை நிராகரித்திருக்கிறார்கள்.

பா.ஜனதாவின் இந்தத் தோல்வி கர்நாடக பா.ஜனதா அரசின் ஒட்டு மொத்த தவறான ஆட்சி மற்றும் ஊழலின் விளை வாகும். மக்கள் மத்தியில் பா.ஜனதா ஆட்சிக்கு எதிராக இருந்த எதிர்ப்பு உணர்வு தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற வாய்ப்பளித்திருக்கிறது.

ரங்கசாமி தான் எப்படியாவது முதல்-அமைச்சராக இருந்தால் போதும் புதுவை மக்களை, எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படாமல் மக்கள் விரும்பாத பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்து இல்லாத கட்சியை உருவாக்க காரணமாகிவிட்டார்.

தென்னிந்தியாவின் கரையாக புதுவையில் மட்டும் பா.ஜனதா கூட்டணி ஆட்சியில் இருப்பது புதுவை மக்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்தி வருகிறது. புதுவை மக்களின் பாரம்பரியத்தை பாதுகாக்க ரங்கசாமி பா.ஜனதா கூட்டணியிலிருந்து இருந்து உடனே விலக வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News