புதுச்சேரி

கோப்பு படம்.

அதிகாரிகள் தயாரிக்கும் கோப்புகளுக்கு கையெழுத்து போடுபவர்தான் ரங்கசாமி

Published On 2023-05-11 14:25 IST   |   Update On 2023-05-11 14:25:00 IST
  • மத்திய அரசு மாநில அரசுக்கு நிதியை வாரிவழங்கியது. எவ்வித சிரமும் இல்லாமல் ஆட்சி நடந்தது.
  • விதி முறைகளுக்கு உட்பட்டுதான் காங்கிரஸ் அரசு செயல்பட்டது.

புதுச்சேரி:

புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம்  கூறியதாவது:-

முதல்-அமைச்சர் ரங்கசாமி நேரடியாக என்னை விமர்சனம் செய்துள்ளார். அவர் முதல்-அமைச்சராக, எதிர்க்கட்சி தலைவராக இருந்துள்ளார்.

 மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் புதுவையில் வளர்ச்சி திட்டங்கள் விரைவாக நடந்தன. கவர்னர்கள் ஆளும் அரசுக்கு ஒத்துழைப்பு தந்தனர். மத்திய அரசு மாநில அரசுக்கு நிதியை வாரிவழங்கியது. எவ்வித சிரமும் இல்லாமல் ஆட்சி நடந்தது.

கடந்த 2016-ல் காங்கிரஸ் அரசு பதவியேற்கும் முன்பு கவர்னர் கிரண்பேடி பொறுப்பேற்று விதிமுறைகளை மீறி செயல்பட ஆரம்பித்தார். அதனால் நீதிமன்றத்தை நாடினோம். சென்னை உயர்நீதி மன்றத்தில் தற்போதைய அமைச்சர் லட்சுமி நாராயணன் தாக்கல் செய்த மேல்முறையீட்டை வக்கீலான முதல்-அமைச்சர் ரங்கசாமி படித்து பார்க்கவேண்டும். துணைநிலை ஆளுநருக்கு தனிப்பட்ட அதிகாரமில்லை என்பது புரியும்.

நிர்வாகம் திரைமறைவில் நடத்த வேண்டுமா? முதல்-அமைச்சருக்கு நிர்வாகமே தெரியாது. நிர்வாக சீர்கேடு பற்றி அவர் எங்களை குற்றம்சாட்டுகிறார். விதி முறைகளுக்கு உட்பட்டுதான் காங்கிரஸ் அரசு செயல்பட்டது. தற்போது நிர்வாக முறைகேடுகள் நடக்கிறது.

 ரங்கசாமி நிர்வாகத்தில் புலி அல்ல. அதிகாரிகள் தயாரிக்கும் கோப்புகளுக்கு கையெழுத்து போடு–பவர்தான். தனது அதி காரத்தை செலுத்தாமல் என்னை குறைகூறுவதை ரங்கசாமி நிறுத்திக் கொள்ள வேண்டும். கிரண்பேடி தொல்லையையும் மீறி திட்டங்களை நிறைவேற்றி னோம். தற்போது அண்ணன்- தங்கை என்று கூறிய நிலையில் திட்டங்கள் தடைப்படுவது ஏன்.?மாநிலஅந்தஸ்து, மத்திய நிதி கமிஷனில் புதுவையை சேர்ப்பது உள்ளிட்ட ரங்கசாமி யின் வாக்குறுதிகள் ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகளாகி யும் செயல்படுத்தவில்லை. ஒன்று கூட நடக்காததை சுட்டிக்காட்டி கேட்கிறோம். ரங்கசாமி கோபப்படுவதில் அர்த்தமில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News