புதுச்சேரி

வருகிற 6-ந்தேதி புதுவை வருகிறார் ஜனாதிபதி: சித்த மருத்துவக்கல்லூரிக்கு அடிக்கல் நாட்டுகிறார்

Published On 2023-05-08 12:40 IST   |   Update On 2023-05-08 12:40:00 IST
  • தமிழகத்துடன் நல்ல நட்புறவு உள்ளது. தமிழகத்துடன் ஒத்து இருப்போம்.
  • புதுவை மாநிலம் தமிழகம், கேரளா, ஆந்திரா மாநிலத்தில் இருப்பதால், பழைய நட்புறவு தொடரும்.

புதுச்சேரி:

கடந்த மார்ச் மாதம் புதுவை சட்டசபையில் நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் புதிய திட்டங்களுக்கான அறிவிப்புகளை முதலமைச்சர் ரங்கசாமி வெளியிட்டார்.

பெண் குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம் வைப்புத்தொகை, பிரதி மாதம் கியாஸ் சிலிண்டருக்கு ரூ.300 மானியம், புதுவையில் சித்த மருத்துவக்கல்லூரி ஆகியவற்றுக்கான அறிவிப்புகளை முதலமைச்சர் ரங்கசாமி வெளியிட்டிருந்தார். இவற்றை தொடங்கி வைக்க ஜனாதிபதி திரவுபதி முர்மு அடுத்த மாதம் 6-ந் தேதி புதுவைக்கு வர உள்ளார்.

2 நாட்கள் புதுவையில் தங்கியிருக்கும் அவர், இந்த திட்டங்களை எல்லாம் தொடங்கி வைக்கிறார்.

இந்த தகவலை முதலமைச்சர் ரங்கசாமி இன்று தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:-

புதிய சட்டசபை கட்டுவதற்கான பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளது.

பணிகள் முழுமையாக முடிந்தபிறகு அடிக்கல் நாட்டு விழா நடைபெறும் என்றார்.

தமிழக எம்.பி.க்களுக்கு புதுவையில் வேலை இல்லை என்று கவர்னர் தமிழிசை விமர்சனம் செய்துள்ளாரே.? என்ற கேள்விக்கு தமிழகத்துடன் நல்ல நட்புறவு உள்ளது. தமிழகத்துடன் ஒத்து இருப்போம். இது தொடரும்.

புதுவை மாநிலம் தமிழகம், கேரளா, ஆந்திரா மாநிலத்தில் இருப்பதால், பழைய நட்புறவு தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News