புதுச்சேரி

 உழவாரப்பணியை எதிர்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

திருக்காமீஸ்வரர் கோவிலில் உழவாரப்பணி

Published On 2023-05-22 09:12 IST   |   Update On 2023-05-22 09:12:00 IST
  • எதிர்கட்சி தலைவர் சிவா தொடங்கி வைத்தார்
  • 150-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கோவில் வளாகத்தை சுத்தம் செய்தனர்.

புதுச்சேரி:

வில்லியனூர் திருக்கா மீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ தேர்த் திருவிழா  கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் உற்சவம் ஜுன் 1-ந் தேதி தேதி நடக்கிறது இதையொட்டி, கூடப்பாக்கம் நிமிலீஸ்வரர் உழவாரப்பணி திருக்கூட்டம் சார்பில் திருக்காமீஸ்வரர் கோவிலில் உழவாரப்பணி நடந்தது. உழவாரப்பணியை எதிர்க்கட்சித் தலைவர் சிவா தொடங்கி வைத்தார். 150-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கோவில் வளாகத்தை சுத்தம் செய்தனர்.

தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப் பட்டது. நிகழ்ச்சியில் கோவில் சிறப்பு அதிகாரி திருவரசன், தி.மு.க தொகுதி செயலாளர் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர்கள் செல்வநாதன், தர்மராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News