புதுச்சேரி

கோப்பு படம்.

பாப்ஸ்கோ கமிட்டி பரிந்துரைகளைஅனுப்பாவிட்டால் அமைச்சரை கண்டித்து போராட்டம்

Published On 2023-05-15 14:58 IST   |   Update On 2023-05-15 14:58:00 IST
  • அமைச்சர் தங்கள் அலுவலகத்தில் நீண்ட நாட்களாக எந்த முடிவும் எடுக்காமல் வைத்திருக்கிறார்.
  • இனியும் காலம் கடத்தினால் அமைச்சரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்படும்.

புதுச்சேரி:

ஏ.ஐ.டி.யூ.சி புதுவை மாநில பொதுச் செயலாளர் சேதுசெல்வம் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

 பாப்ஸ்கோ ஊழியர்களுடனான பேச்சு வார்த்தையில் பிரச்சனைகளை தீர்வுக்கு கொண்டு வருவதற்கு கமிட்டி அமைக்கப்பட்டது.

இந்த கமிட்டி கூடி அரசுக்கு அறிக்கை கொடுப்பார்கள் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து வந்தனர். இதன்படி முறையாக கமிட்டி கூட்டம் நடந்து அறிக்கை அமைச்சர் சாய்.ஜெ. சரவணன் குமாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையை அமைச்சர் படித்து பார்த்து தேவையென்றால் அவரின் கருத்தை பதிவு செய்து முதல்-அமைச்சருக்கு அனுப்ப வேண்டும். வந்த கோப்பை அமைச்சர் தங்கள் அலுவலகத்தில் நீண்ட நாட்களாக எந்த முடிவும் எடுக்காமல் வைத்திருக்கிறார்.

இதனால் முதல்-அமைச்சர் பாப்ஸ்கோ சம்பந்தமாக முடிவெடுப்பதற்கு காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. எனவே உடனடியாக அமைச்சர் கோப்பினை ஆய்வு செய்து முதல்- அமைச்சருக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இனியும் காலம் கடத்தினால் அமைச்சரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்படும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News