கோப்பு படம்.
- ஆர்ப்பாட்டத்துக்கு ஏ.ஐ.டி.யூ.சி பொதுச்செயலாளர் சேதுசெல்வம் தலைமை வகித்தார்.
- விசாரணை நடத்தி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.
புதுச்சேரி:
புதுவை குரும்பாபேட் பாண்லே தலைமை அலுவலகம் முன்பு பாண்லே தொழிலாளர்கள், ஏ.ஐ.டி.யூ.சி, அரசு ஊழியர் சம்மேளனம், தொ.மு.ச, நாம் தமிழர் தொழிலாளர் சங்கம் உட்பட பல்வேறு சங்கத்தினர் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்துக்கு ஏ.ஐ.டி.யூ.சி பொதுச்செயலாளர் சேதுசெல்வம் தலைமை வகித்தார்.
பாண்லே சங்க நிர்வாகி கள் முன்னிலை வகித்தனர். நாம் தமிழர் தொழிற்சங்க தலைவர் ரமேஷ், ஏ.ஐ.டி.யூ.சி செயலாளர் முத்துராமன் மற்றும் பல்வேறு சங்க நிர்வாகிகள் சண்முகம், வில்வலிங்கம், அன்பரசு, காசி, வீரப்பன், துரைரங்கன், தன்ராஜ், ராமன், அரவிந்த், கஜேந்திரன், ஜெயபால், ஏழுமலை, செந்தில்குமார், தமிழ்செல்வன், அழகப்பன், ஞானமூர்த்தி, கண்ணன், சரவணன், சிவக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஊழலாலும், திறமையற்ற நிர்வாகத்தாலும் ரூ.20 கோடிக்கு மேல் இழப்பை ஏற்படுத்தி பாண்லே நிர்வாக அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்ய வேண்டும். அவர்கள் மீது துறைரீதியான விசாரணை நடத்தி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.