புதுச்சேரி

வியாபாரிகளிடம் பறிமுதல் செய்த பிளாஸ்டிக் பைகளை திரும்ப ஒப்படைத்த அதிகாரிகள்

Published On 2023-10-06 03:54 GMT   |   Update On 2023-10-06 03:54 GMT
  • பறிமுதல் செய்த பிளாஸ்டிக் பைகளை திரும்பக் கேட்டு நகராட்சி அதிகாரிகள், ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
  • வியாபாரிகளை ஒருங்கிணைத்து கூட்டம் நடத்தி அறிவிப்பு செய்யுங்கள்.

புதுச்சேரி:

புதுச்சேரியில் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது.

மேலும், இத்தகைய பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள், அதனை விற்பனை மற்றும் பயன்படுத்தும் கடைகள் மீதும் நடவ டிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.

அதனையடுத்து, உழவர்கரை நகராட்சி அதிகாரிகள் நேற்று திலாசுப்பேட்டை பகுதியில் இத்தகைய பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என திடீர் ஆய்வு நடத்தினர். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் கடைகளில் இருப்பதை கண்டு, அவற்றை பறிமுதல் செய்தனர். மேல் நடவடிக்கைக்காக அவற்றை வாகனங்களில் ஏற்றினர். மேலும் பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்த வியாபாரிகளுக்கும் அபராதம் விதித்தனர்.

இதையறிந்த திலாசுப்பேட்டை பகுதியில் உள்ள வியாபாரிகள் அங்கு ஒன்று திரண்டு வந்து பிளாஸ்டிக் பொருட்கள் ஏற்றப்பட்ட வாகனத்தை சிறை பிடித்தனர். பறிமுதல் செய்த பிளாஸ்டிக் பைகளை திரும்பக் கேட்டு நகராட்சி அதிகாரிகள், ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

'வியாபாரிகளை ஒருங் கிணைத்து கூட்டம் நடத்தி அறிவிப்பு செய்யுங்கள். அதன் பிறகு வியாபாரிகள் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் பறி முதல் செய்யுங்கள்'என ஆவேசமாக கூறினர். அதையடுத்து நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்த பிளாஸ்டிக் பைகளை வியாபாரிகளிடம் திரும்ப கொடுத்து விட்டு சென்றனர்.

Tags:    

Similar News