புஷ்கரணி விழாவின் நிறைவு நாள் கங்கா ஆரத்தியில் விசாகப்பட்டினம் ஸ்ரீ மவுனானந்த தபோவனம் ஸ்ரீ சவுபாக்கிய புவனேஸ்வரி பீட மடாதிபதி ஸ்ரீ ராமானந்த பாரதி சாமிகள் பங்கேற்றார். அருகில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் உள்ளனர்.
புஷ்கரணி நிறைவு விழா குழுவினருக்கு அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் பாராட்டு
- பக்தர்கள் திரண்டு புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.
- தேனீ.ஜெயக்குமார் அனைவருக்கும் நினைவுப்பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
புதுச்சேரி:
வில்லியனூர் திருக் காஞ்சி கெங்கவராக நதீஸ்வரர் கோவிலில் கடந்த மாதம் 22-ந்தேதி தொடங்கி ஆதி புஷ்கரணி விழா நடந்தது.
புஷ்கரணி விழாவின் நிறைவு விழா நடந்தது. இதில் ராசி, நட்சத்திரம் தெரியாத பக்தகர்கள், மற்ற நாட்களில் நீராட முடியாத பக்தர்கள் திரண்டு புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர். கங்கா ஆரத்தியுடன் புஷ்கரணி விழா நிறைவு பெற்றது.
இதையொட்டி அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், விழா சிறப்பாக நடத்த உதவிய விழாக்குழுவினர், விழா ஏற்பாட்டாளர்கள் அனைவருக்கும் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தலைமையில் பாராட்டு விழா நடந்தது. அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் அனை வருக்கும் நினைவுப்பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தார்.