புதுச்சேரி

எம்.ஐ.டி கல்லூரியில் மரைன் என்ஜினீயரிங் பயிலரங்கம் நடைபெற்ற காட்சி.

எம்.ஐ.டி கல்லூரியில் மரைன் என்ஜினீயரிங் பயிலரங்கம்

Published On 2023-05-10 06:22 GMT   |   Update On 2023-05-10 06:22 GMT
  • கடல் பக்கங்களில் இயந்திர பொறியாளரின் பங்கை பற்றி விளக்கினார்.
  • மாணவர்களுக்காகப் பின்பற்றப்படும் பல்வேறு பாட அமைப்புகளை எடுத்துரைத்தார்.

புதுச்சேரி:

புதுவை மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியில், மெக்கானிக்கல் என்ஜினீயரிங் மாணவர்களுக்கு தரம் மற்றும் நம்பகத்த ன்மைக்கான தேசிய நிறுவனம் என்.ஐ.கியூ.ஆர் நிறுவன சங்கத்தின் கீழ் மெக்கானிக்கல் என்ஜினீயர்களுக்கான மரைன் என்ஜினீயரிங் வாய்ப்பு என்ற தலைப்பில் ஒரு நாள் பயிலரங்கம் நடந்தது.

மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளை தலைவர், நிர்வாக இயக்குனர் தனசேகரன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் சுகுமாறன் மற்றும் டாக்டர் நாராயணசாமி மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளையின் செயலாளர், முதல்வர் டாக்டர் மலர்க்கன் வாழ்த்துரை வழங்கினார். இயந்திரவியல் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் ராஜாராம் வரவேற்று பேசினார்.

துறைத்தலைவர் கோபிநாத் ஏ.எம்.இ.டி பல்கலைக்கழகம் மெக்கா னிக்கல் என்ஜினீயரிங்கின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து பேசினார்.

4-வது என்ஜினீயர் 1-வது என்ஜினீயர் மற்றும் தலைமை என்ஜினீயர் என பல்வேறு நிலைகளில் தலைமை என்ஜினீயர் மற்றும் கேப்டனுக்கு இடையேயான அடிப்படை ஒப்பீட்டையும் அவர் பாகுபடுத்தினார்.

கப்பலின் வழிசெலுத்தல், பாதுகாப்பு அமைப்புகள், உந்துவிசை மற்றும் மின் உற்பத்தி அலகு போன்ற கடல் பக்கங்களில் இயந்திர பொறியாளரின் பங்கை பற்றி விளக்கினார்.

சென்னை ஏ.எம்.இ.டி நகரக் கல்லூரி முதல்வர் கேப்டன் ராமகிருஷ்ணா பேசினார்.

சென்னை ஏ.எம்.இ.டி நகரக் கல்லூரி முதல்வர் கோபிநாத் பல்கலைக்கழகம் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் மாணவர்களுக்காகப் பின்பற்றப்படும் பல்வேறு பாட அமைப்புகளை எடுத்துரைத்தார்.

அமர்வு கேப்டன் ராம கிருஷ்ணா, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே கேள்விகளைக் கேட்டார். முடிவில் நன்றியுரையுடன் விழா நிறைவடைந்தது.

Tags:    

Similar News