புதுச்சேரி

தீவிரமடையும் டெங்கு காய்ச்சல்- புதுச்சேரியில் இருவர் உயிரிழப்பு

Published On 2023-09-13 19:20 IST   |   Update On 2023-09-13 19:20:00 IST
  • மாணவி டெங்கு காய்ச்சலால் உயிரிழந்ததாக மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
  • புதுச்சேரியில் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் டெங்கு காய்ச்சலின் தீவிரம் அதிகரித்து வருகிறது.

சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 4 வயது சிறுவன் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்த செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்நிலையில், புதுச்சேரியில் கல்லூரி மாணவி உள்பட இரண்டு பெண்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

புதுச்சேரியில் உள்ள குருமாம்பேட் பகுதி வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த கல்லூரி மாணவி காயத்ரி (19) என்பவர் உயிரிழந்துள்ளார்.

மூலக்குளம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மாணவி டெங்கு காய்ச்சலால் உயிரிழந்ததாக மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதேபோல், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மீனா ரோஷினி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மீனா ரோஷினி நேற்று உயிரிழந்த நிலையில் டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று காயத்ரி என்ற கல்லூரி மாணவி உயிரிழந்த நிலையில், புதுச்சேரியில் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.

Tags:    

Similar News