புதுச்சேரி

காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் நாய் தொல்லை அதிகரிப்பு

Published On 2023-08-13 07:26 GMT   |   Update On 2023-08-13 07:26 GMT
  • பல்வேறு அரசியல் அமைப்பினர், பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்
  • சாதாரணமாக நடமாடும் நாய், பூனை, எலிகளை ஆஸ்பத்திரி நிர்வாகம் கட்டுப்படுத்த வேண்டும்

புதுச்சேரி:

காரைக்கால் நகரின் மையப் பகுதியில் அரசு ஆஸ்பத்திரி இயங்கி வருகிறது. இந்த ஆஸ்பத்திரி கடந்த பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லாமல் இயங்கி வருவதாக பல்வேறு அரசியல் அமைப்பினர், பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். சாதாரண ஜுரம், விபத்து என சென்றால்கூட, அண்டை மாநிலங்களுக்கு டாக்டர்கள் பரிந்துரை செய்யும் அவல நிலை உள்ளது. இந்நிலையில், அண்மையில் அரசு ஆஸ்பத்திரியின் உள்ள லிப்ட் உடைந்த நிலையில் உள்ளது.

கடந்த சில நாட்களாக நகரின் பல இடங்களில் சுற்றித்திரிந்த நாய்களின் கூட்டம், ஆஸ்பத்திரியில் உள்ளே குறிப்பாக பிரசவ பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, குழந்தைகள் பிரிவு உள்ளிட்ட பல இடங்களில் சர்வ சாதாரணமாக சுற்றித் திரிவதால், நோயாளிகள் இடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. மேலும் பெருச்சாளி மற்றும் பூனைகள் பாதுகாக்கப்பட்ட அறுவை சிகிச்சை கூடம், மருந்தகம், கேண்டின் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பகலில் கூட நடமாடுவதால் நோயாளிகள் பெரும் அச்சத்தில் உள்ளனர். எனவே ஆஸ்பத்திரியில் சர்வ சாதாரணமாக நடமாடும் நாய், பூனை, எலிகளை ஆஸ்பத்திரி நிர்வாகம் கட்டுப்படுத்த வேண்டும் என நோயாளிகள் மற்றும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News