புதுச்சேரி

கோப்பு படம்.

பொதுத்தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை

Published On 2023-05-08 10:29 IST   |   Update On 2023-05-08 10:29:00 IST
  • ஊக்கத்தொகை வழங்கும் விழா கூட்டுறவு கடன் சங்க அலுவலக வளாகத்தில் நடந்தது.
  • மாணவ-மாணவிகளுக்கு ஆறுதல் பரிசாக ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டது.

புதுச்சேரி:

புதுவை பொது ஊழியர்கள் கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வில் சாதனை படைத்த உறுப்பினர்களின் குடும்ப மாணவர்களுக்கு ஆண்டு தோறும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

 அதன்படி 2021-22-ம் கல்வி ஆண்டில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழா கூட்டுறவு கடன் சங்க அலுவலக வளாகத்தில் நடந்தது.

சங்கத் தலைவர் தமிழ்ஒளி தலைமை தாங்கினார். செயலாளர் கோவிந்த நாயுடு முன்னிலை வகித்தார்.

 விழாவில், துணை தலைவர் ராஜசேகரன் முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.7 ஆயிரம், 3-வது பரிசாக ரூ.5 ஆயிரம் மற்றும் கல்வி உபகரணங்களை மாணவ-மாணவி களுக்கு வழங்கினார்.

தொடர்ந்து 80 சதவீத மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு ஆறுதல் பரிசாக ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டது. விழாவில் சங்கத்தின் இயக்குனர்கள் இளங்கோவன், கணேஷ், மருதாச்சலம், பிரபாகரன், அருண்குமார், ஆறுமுகம், வசந்த ராஜன், கோபி கிருஷ்ணன், வரதராஜுலு, புஷ்பசந்துரு உட்பட உறுப்பினர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News