புதுச்சேரி

கோப்பு படம்

அரையாண்டு வருமான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்

Published On 2023-05-05 13:52 IST   |   Update On 2023-05-05 13:52:00 IST
  • கடனை திருப்பி செலுத்தும் கால அளவு ஓராண்டுக்கு மேல் இருக்கக்கூடாது.
  • நிதி நிறுவனங்களுக்கு அரசு உத்தரவு.

புதுச்சேரி:

புதுவை நிறுவனங்களின் பதிவாளர் கோகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நிதி நிறுவனமானது அதன் உறுப்பினர்களுக்கு தங்கம், வெள்ளி நகைகள் உட்பட பிணையங்களுக்கு எதிராக மட்டுமே கடன் வழங்க வேண்டும். கடனை திருப்பி செலுத்தும் கால அளவு ஓராண்டுக்கு மேல் இருக்கக்கூடாது. தனி நபர் கடன் பிணையமாக வழங்கப்படும் சொத்து மதிப்பில் 50 சதவீதத்திற்கு மிகக்கூடாது. இந்த கடனை திருப்பி செலுத்தும் கால அளவு 7 ஆண்டுக்கு மிகக்கூடாது. நிதி நிறுவனம் தனி நபர் ஒருவரை 5 ஆண்டுக்கு மேல் தொடர்ச்சியாக தணிக்கையாளராக பணி அமர்த்தக்கூடாது.

நிதி நிறுவனங்கள் ஒவ்வொரு அரையாண்டு முடிவடைந்த 30 நாளில் பதிவாளரிடம் தொழிற்பயி ற்சியில் உள்ள நிறுவன செயலர், பட்டய கணக்கர், கணக்காளரால் உரிய சான்றளிக்கப்பட்ட அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.

விதிகளில் உள்ள அனைத்து சட்ட வரைமுறை களுக்கும் நிறுவனம் இணங்கி நடந்துள்ளதற்கான சான்றிதழை நிறுவனத்தின் தணிக்கையாளர் ஒவ்வொரு ஆண்டும் அளிக்க வேண்டும். அந்த சான்றிதழ் தணிக்கை அறிக்கையுடன் இணைக்க வேண்டும். முதலீட்டாளர்கள் முதலீடு அல்லது வைப்பீடு எதையும் செய்யும் முன் மத்திய அரசின் அதிகார முறை அரசிதழில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் இருந்து நிதி நிறுவனத்தின் தகுதி நிலையை சரிபார்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News