புதுச்சேரி

கடம்பாடி அம்மன் கோவில் செடல் உற்சவம் நடைபெற்ற காட்சி.

கடம்பாடி அம்மன் கோவில் செடல் உற்சவம்

Published On 2023-05-06 09:52 IST   |   Update On 2023-05-06 09:52:00 IST
  • தீச்சட்டி ஏந்தி ஊர்வலம் நிகழ்ச்சியும் விமர்சையாக நடைபெற்றது.
  • இதற்கான ஏற்பாடுகளை காட்டுக்குப்பம் கிராம மக்கள் செய்திருந்தனர்.

புதுச்சேரி:

 பாகூர் தொகுதி காட்டுக்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள கடம்பாடி அம்மன் 42வது ஆண்டு செடல் உற்சவ விழா கடந்த மாதம் 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பின்னர் தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும்  நேரங்களில் சிறப்பு அலங்காரத்தில் ராஜராஜேஸ்வரி, தானிய லட்சுமி, ஆனந்த சேஷனம், திருச்செந்தூர் முருகன், மதுரை மீனாட்சி சாமிகளின் வீதி உலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நாளான நேற்று காலை 108 பால்குட ஊர்வலமும் பிறகு மாலையில் 101 தீச்சட்டி ஏந்தி ஊர்வலம் நிகழ்ச்சியும் விமர்சையாக நடைபெற்றது.

பிறகு கார், டிராக்டர், கிரேன் வாகனங்களை கொண்டு பக்தர்கள் செடல் உற்சவம் நிகழ்ச்சியும் விமர்சையாக நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை காட்டுக்குப்பம் கிராம மக்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News