சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்கிய காட்சி.
அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை
- புதுவை அரசு கல்வித்துறை சார்பில் அரசு பள்ளிகளில் பயிலுகின்ற மாணவ-மாணவியர்க ளுக்கு இலவச சீருடை தையல் கூலி மற்றும் யோகா பயிற்சி விரிப்புகள் வழங்கப்படுகிறது.
- சபாநாயகருமான ஏம்பலம் செல்வம் அந்தந்த பள்ளிகளுக்கு சென்று சீருடைகள் தையல் கூலி மற்றும் யோகா பயிற்சி விரிப்புகளை வழங்கினார்.
புதுச்சேரி:
புதுவை அரசு கல்வித்துறை சார்பில் அரசு பள்ளிகளில் பயிலுகின்ற மாணவ-மாணவியர்க ளுக்கு இலவச சீருடை தையல் கூலி மற்றும் யோகா பயிற்சி விரிப்புகள் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் மணவெளி தொகுதியில் உள்ள ஆண்டியார் பாளையம் அரசு நடுநிலைப்பள்ளி, நல்லவாடு அரசு நடு நிலைப்பள்ளி, புதுக்குப்பம் அரசு தொடக்கப்பள்ளி, பூரணாங்குப்பம் அரசு நடுநிலைப்பள்ளி, இடையார்பாளையம் அரசு தொடக்கப்பள்ளி ஆகிய பள்ளிகளில் பயில்கின்ற மொத்தம் 728 மாணவ - மாணவியர்களுக்கு தொகுதி எம்.எல்.ஏ.வும், சபாநாயகருமான ஏம்பலம் செல்வம் அந்தந்த பள்ளிகளுக்கு சென்று சீருடைகள் தையல் கூலி மற்றும் யோகா பயிற்சி விரிப்புகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சிகளில் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் முக்கிய பிரமு கர்கள்களான பா.ஜனதா மாநில விவசாய அணி பொறுப்பாளர் ராமு, தொகுதி தலைவர் லட்சுமி காந்தன், பா.ஜனதா விவசாய அணி சக்திபாலன், கிருஷ்ண மூர்த்தி, கூட்டுறவு சங்க தலைவர் தட்சிணா மூர்த்தி, இயக்குனர் சக்தி வேல், ராஜா மற்றும் நல்லவாடு கிராம பஞ்சாயத்தார், புதுக்குப்பம் கிராம பஞ்சாயத்தார், இடையார் பாளையம் பகுதி பஞ்சா யத்தார் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.