புதுச்சேரி

கேக்வெட்டி கிறிஸ்துமஸ் கொண்டாடிய வெளிநாட்டு பயணிகள்

Published On 2023-12-25 06:38 GMT   |   Update On 2023-12-25 06:38 GMT
  • ஓட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகள் அனைத்திலும் சுற்றுலா பயணிகளால் அறைகள் நிறைந்துவிட்டன.
  • விழாவில் பங்கேற்ற சுற்றுலா பயணிகள், குழந்தைகளுக்கு கிறிஸ்துமஸ் தாத்தா பரிசு வழங்கினார்.

புதுச்சேரி:

கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாடுவதற்காக பிரான்சு உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் புதுவையில் குவிந்துள்ளனர்.

இதனால் புதுவை மற்றும் அதனையொட்டியுள்ள ஓட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகள் அனைத்திலும் சுற்றுலா பயணிகளால் அறைகள் நிறைந்துவிட்டன.

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி புதுவை நகர பகுதியில் உள்ள தேவாலயங்களில் நேற்று நள்ளிரவு சிறப்பு திருப்பலி நடந்தது.

இதில் வெளிமாநில மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வந்திருந்த கிறிஸ்தவர்கள், சுற்றுலா பயணிகள் பங்கேற்றனர்.

தனியார் ஒட்டல்கள், விடுதிகளில் கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் சுற்றுலா பயணிகள் கேக் வெட்டி கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடினர்.

விழாவில் பங்கேற்ற சுற்றுலா பயணிகள், குழந்தைகளுக்கு கிறிஸ்துமஸ் தாத்தா பரிசு வழங்கினார்.

Tags:    

Similar News