புதுச்சேரி

வெடிகுண்டு வீசி கொலை நடந்த இடத்தில் போலீசார் விசாரணை நடத்திய காட்சி. கொலை செய்யப்பட்ட ராஜி. 

null

இறுதி ஊர்வலத்தில் பட்டாசு வெடிப்பதில் தகராறு- வெடிகுண்டு வீசி டிரைவர் படுகொலை

Published On 2023-06-22 10:29 IST   |   Update On 2023-06-22 11:29:00 IST
  • வழக்கு பதிவு செய்து நிர்மல், ஹரி ஆகியோரை போலீசார் தேடிவருகின்றனர்.
  • வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்தனர்.

புதுச்சேரி:

புதுச்சேரி முதலியார் பேட்டை அனிதா நகர் தியாகு முதலியார் வீதி, ஹவுஸ்சிங் போர்டு குடியிருப்பை சேர்ந்தவர் ராஜி (வயது 32).

லாரி டிரைவரான ராஜி. குடும்ப பிரச்னை காரணமாக மனைவியை பிரிந்து வசித்து வந்தார்.

தேங்காய்திட்டில் வசித்து வந்த ராஜிவின் உறவினர் ஒருவர் இறந்தார். அவரது இறுதி ஊர்வலம் நேற்று மாலை நடந்தது.

இறுதி ஊர்வலத்தில் ராஜி பட்டாசு வெடித்தபடி சென்றார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வேல்ராம்பட்டை சேர்ந்த நிர்மல், ஹரி ஆகியோர் வெடிக்க பட்டாசு கேட்டனர். அப்போது அவர் நீங்கள் சின்ன பசங்க... உங்களுக்கு பட்டாசு வெடிக்க தெரியாது என்று கூறியுள்ளார்.

இதனால் ராஜிக்கும் அவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. இதில் ராஜி அவர்களை தாக்கியுள்ளார்.

அவர்கள் ராஜிவை தாக்க முயற்சித்த போது உறவினர்கள் தடுத்து சமாதானம் செய்தனர். இதனால் இறுதி ஊர்வலத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதனிடையே முதலியார்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். அப்போது தங்களுக்குள் பேசி தீர்த்து கொள்வதாக இருதரப்பும் கூறியதால் போலீசார் திரும்பி சென்றனர்.

இறுதி சடங்கு முடிந்த பின்பு ராஜி வீட்டிற்கு வந்தார். அவரை பின் தொடர்ந்து நிர்மலும், ஹரியும் வந்தனர். ராஜியின் வீட்டை அடையாளம் தெரிந்த பின்னர் அவர்கள் திரும்பி சென்றனர்.

இரவு 8.30 மணிக்கு அருகில் உள்ள ஓட்டலுக்கு ராஜி சென்று டிபன் வாங்கி கொண்டு வீட்டின் மாடிக்கு ராஜி சென்றார்.

அப்போது அவருக்கு பின்னால் பைக்கில் வந்த நிர்மலும், ஹரியும் தாங்கள் கொண்டு வந்த நாட்டு வெடிகுண்டை எடுத்து ராஜி மீது வீசினர்.

அவரது முதுகில் வெடிகுண்டு விழுந்து பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே ராஜி துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். வெடிகுண்டு பயங்கர சத்ததுடன் வெடித்ததில் அக்கம்பக்கத்தில் உள்ள மக்கள் அலறியடித்து கொண்டு வெளியே ஓடிவந்தனர்.

அங்கு ராஜி வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அங்கு நின்ற கொலையாளிகள் 2 பேரும் பொதுமக்கள் வருவதை பார்த்ததும் பைக்கில் ஏறி தப்பி சென்றனர்.

இதுகுறித்து முதலியார்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த ராஜி உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்து நிர்மல், ஹரி ஆகியோரை போலீசார் தேடிவருகின்றனர்.

வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்தனர். நாட்டு வெடிகுண்டு புதிதாக தயாரிக்கப்பட்டது தெரியவந்தது.

ஆட்கள் நடமாட்டம் அதிகம் உள்ள குடியிருப்பு பகுதியில் வெடிகுண்டு வீசி டிரைவர் கொலை செய்யப் பட்ட சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News