புதுச்சேரி

புதுவை காங்கிரசார் ராஜா திரையரங்கம் அருகே பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

காங்கிரசார் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

Published On 2023-05-13 14:10 IST   |   Update On 2023-05-13 14:10:00 IST
  • மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி. சுப்பிரமணிய தலைமையில் ஊர்வலமாக புறப்பட்டனர்.
  • இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்த பாபு பொதுசெயலாளர் தனுசு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

புதுச்சேரி:

கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றுள்ளது.

இதனைநாடு முழுவதும் உள்ள காங்கிரசார் இன்று கொண்டாடினர். அதேபோல் புதுவை மாநில காங்கிரஸ் கட்சி சார்பிலும் காங்கிரஸ் வெற்றி கொண்டாடப்பட்டது.

புதுவை மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் வைசியால் வீதியில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் ஒன்று கூடினர் அங்கிருந்து மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி. சுப்பிரமணிய தலைமையில் ஊர்வலமாக புறப்பட்டனர்

அண்ணா சாலை காமராஜர் சாலை சந்திப்பில் பட்டாசு வெடிக்கும் இனிப்பு வழங்கியும் தேர்தல் வெற்றியை கொண்டாடினர் இந்த நிகழ்ச்சியில் முன்னாள் முதல்- அமைச்சர் நாராயணசாமி, வைத்தியலிங்கம் எம்.பி, முன்னாள் அமைச்சர் கந்தசாமி, முன்னாள் எம்எல்ஏ ஆனந்தராமன் சீனியர் துணை தலைவர் தேவதாஸ், இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்த பாபு பொதுசெயலாளர் தனுசு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர் 

Tags:    

Similar News