புதுச்சேரி

வெற்றி பெற்றவர்களுக்கு சபாநாயகர் ஏம்பலம் செல்வம், செல்வகணபதி எம்.பி, வி.பி.ராமலிங்கம் எம்.எல்.ஏ. ஆகியோர் பரிசு வழங்கிய காட்சி.

கலை-ஓவியப்போட்டி- சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பரிசு வழங்கினர்

Published On 2023-02-19 07:19 GMT   |   Update On 2023-02-19 07:19 GMT
  • மாணவர்களுக்கான 28 மந்திரங்கள் பெற்றோர்களுக்கான 6 மந்திரங்கள் அடங்கிய தேர்வு வீரர்கள் "எக்ஸாம் வாரியர்" என்ற புத்தகத்தையும் மோடி எழுதியுள்ளார்.
  • ஓவியப்போட்டியில் மாணவர்கள் படிக்கும் நேரம், யோகா, உணவு நேரம், குடும்ப நேரம், ஆகிய மந்திரங்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்து நடத்தப்பட்டது.

புதுச்சேரி:

மாணவர்கள் தேர்வுக ளின் போது அவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்க "பரிக்க்ஷா பே சர்ச்சா" என்னும் வழிகாட்டுதல் நிகழ்ச்சியை பிரதமர் மோடி நடத்தி வருகிறார்.

இதனை அடிப்படையாகக் கொண்டு அவ்வப்போது மாணவர்களுக்கான 28 மந்திரங்கள் பெற்றோர்களுக்கான 6 மந்திரங்கள் அடங்கிய தேர்வு வீரர்கள் "எக்ஸாம் வாரியர்" என்ற புத்தகத்தையும் மோடி எழுதியுள்ளார். மேலும் மன அழுத்தத்தை சமாளிப்பதற்கான அவர்களின் அனுபவங்களையும் உதவிக் குறிப்புக ளையும் பகிர்ந்து கொள்ள மாணவர்களை ஊக்குவிக்கிறார்.

பிரதமர் கடந்த ஜனவரி மாதம் 27-ந் தேதி காணொளி காட்சி மூலம் மாணவர்களுடன் உரையாடினார்.

இந்நிகழ்ச்சியை மையமாக கொண்டு மாணவர்களிடையே கலை மற்றும் ஓவியப் போட்டி ஜனவரி 20-ந் தேதி புதுவையில் நடைபெற்றது. ஓவியப்போட்டியில் மாணவர்கள் படிக்கும் நேரம், யோகா, உணவு நேரம், குடும்ப நேரம், ஆகிய மந்திரங்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்து நடத்தப்பட்டது.

புதுவையில் உள்ள 4 மாவட்டங்களில் உள்ள சுமார் 3000-க்கும் மேல் அரசு மற்றும் மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

ஒவ்வொரு மாவட்டங்களிலும் சிறந்த கலை மற்றும் ஓவிய திறன் கொண்ட மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, மொத்தம் 157 மாணவர்க ளுக்கு பரிசுகள், தேர்வு வீரர்கள் (எக்ஸாம் வாரியர்) புத்தகம், மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

ஓட்டல் சற்குருவில் நடந்த இந்நிகழ்ச்சியில் செல்வகணபதி எம்.பி. தலைமை தாங்கி பேசினார். நிகழ்ச்சியில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், வி.பி.ராமலிங்கம் எம்.எல்.ஏ. பா. ஜனதாகட்சியின் மாநில பொது செயலாளர் மோகன்குமார் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினர்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

Tags:    

Similar News