புதுச்சேரி

கோப்பு படம்.

9-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை

Published On 2023-05-20 11:15 IST   |   Update On 2023-05-20 11:15:00 IST
  • தாய்க்கு உதவியாக வீட்டு வேலை எதுவும் செய்யாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
  • தாயின் சேலையால் மின் விசிறியில் தூக்கு போட்டு தொங்கினார்.

புதுச்சேரி:

வில்லியனூர் அருகே பொறையூர் பேட் புது நகரை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் புதுவை அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக வேலை செய்து வருகிறார்.  இவரது மனைவி கோமளா. இவர்களது மூத்த மகள் தவப்பிரியா 14 இவர் தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

பள்ளி விடுமுறை என்பதால் வீட்டில் இருந்து வந்த தவப்பிரியா தாய்க்கு உதவியாக வீட்டு வேலை எதுவும் செய்யாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை அவரது தந்தை வெங்கடேசன் கண்டித்தாக தெரிகிறது. இதனால் தவப்பிரியா மன வருத்தத்தில் இருந்து வந்தார்.

 வெங்கடேசன் வெளியே சென்று விட்டார். அவரது மனைவி கோமளா மளிகைக்கடைக்கு பொருட்கள் வாங்க சென்றார்.

அப்போது வீட்டில் தனியக இருந்த தவப்பிரியா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து தாயின் சேலையால் மின் விசிறியில் தூக்கு போட்டு தொங்கினார்.

சிறிது நேரம் கழித்து பொருட்கள் வாங்கிக்கொண்டு வீடு திரும்பி கோமளா மகள் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மகளை தூக்கில் இருந்து மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்குகொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் தவப்பிரியா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து வெங்கடேசன் கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News