கோப்பு படம்.
போலீஸ் வாகனத்தை சேதப்படுத்திய 5 பேர் கைது
- மேலும் கும்பலை பிடிக்க சி.சி.டி.வி. கேமரா மூலம் வேட்டை
- மோதலில் ஈடுப்பட்டவர்கள் மற்றும் தலைமறைவாக உள்ளவர்களை போலீசார் தனிப்படை அமைத்து தேடிவருகின்றனர்.
புதுச்சேரி:
நெட்டப்பாக்கம் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட கரியமாணிக்கம் காலணி பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு இரு கோஷ்டிக்கிடையே மோதல் ஏற்பட்டது. போலீசார் அவர்களை தடியடி நடத்தி கலைத்தனர்.
இந்த மோதலில் போலீசார் தாக்கப்பட்டதோடு போலீஸ் வாகனத்தின் முன்பக்க கண்ணாடி உடைக்கப்பட்டது.
இந்த கலவரத்தில் ரஜினி தரப்பு மற்றும் நரேந்திரன் தரப்பு என 13பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர். இதில் 5பேரை போலீசார் கைது செய்தனர். ரஜினி தரப்பில் பெரியாண்டர், பவாணி சங்கர் என 2 பேரும், நரேந்திரன் தரப்பில் நரேந்திரன், பாரதிராஜா, கதிரவன் (எ) விஜயபிரபாகரன் என 3 பேரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
மேற்கொண்டு சி.சி.டி.வி கேமராவில் பதிவான பதிவுகளை கொண்டு மோதலில் ஈடுப்பட்டவர்கள் மற்றும் தலைமறைவாக உள்ளவர்களை போலீசார் தனிப்படை அமைத்து தேடிவருகின்றனர்.