செய்திகள்
திருத்தணி கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்: பல மணி நேரம் காத்திருந்து தரிசனம்
ஆங்கில புத்தாண்டு மற்றும் முருகப்பெருமானுக்கு உகந்த நாளான செவ்வாய்கிழமை என்பதால் திருத்தணி கோவிலில் காலை முதல் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர்.
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, திருத்தணி முருகன் கோவிலில், இன்று அதிகாலை, 4 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், நடந்தது, தொடர்ந்து, மூலவருக்கு தங்ககீரிடம், தங்கவேல், பச்சை மாணிக்க மரகதகல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது.
இரவு, 7.30 மணிக்கு வெள்ளிநாக வாகனத்தில் உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி, மாடவீதியில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆங்கில புத்தாண்டு மற்றும் முருகப்பெருமானுக்கு உகந்த நாளான செவ்வாய்கிழமை என்பதால் திருத்தணி கோவிலில் காலை முதல் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர். இதனால், பொது வழியில் 6 மணி நேரம் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனர்.