செய்திகள்
அரை சதமடித்த உஸ்மான் கவாஜா

உலகக்கோப்பை கிரிக்கெட் - நியூசிலாந்து அணி வெற்றி பெற 244 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா

Published On 2019-06-29 16:20 GMT   |   Update On 2019-06-29 16:20 GMT
உலகக்கோப்பை கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணி வெற்றி பெற 244 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்துள்ளது ஆஸ்திரேலியா.
லார்ட்ஸ்:

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று லார்ட்சில் நடைபெறும் 37-வது லீக் ஆட்டம் மாலை 6 மணிக்கு தொடங்க உள்ளது. இதில் ஆஸ்திரேலியாவும், நியூசிலாந்தும் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் ஆரோன் பின்ச் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர்களாக வார்னரும், பின்ச்சும்  களமிறங்கினர். ஆஸ்திரேலிய அணி 15 ரன்களை கடந்த போது கேப்டன் பின்ச் 8 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அதன்பின்னர் வந்த வீரர்களை நியூசிலாந்து அணியின் பந்து வீச்சாளர்கள் விரைவில் வெளியேற்றினர்.



ஆஸ்திரேலியா 92 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஓரளவு நிலைத்து நின்று ஆடிய உஸ்மான் கவாஜா 88 ரன்னில் வெளியேறினார். அவருக்கு ஒத்துழைப்பு அளித்த அலெக்ஸ் கேரி 71 ரன்னில் அவுட்டானார்.

இறுதியில்,  50 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுகள் இழந்து 243 ரன்கள் எடுத்தது. போல்ட் ஹாட்ரிக் விக்கெட் எடுத்தார். இதையடுத்து, நியூசிலாந்து அணிக்கு 244 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

நியூசிலாந்து தரப்பில் போல்ட் 4 விக்கெட்டும், பெர்குசன், நீஷம் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 
Tags:    

Similar News