செய்திகள்

பவர் பிளேயில் இந்தியா மிகமிக மோசம்: 4.32 சராசரியுடன் 9-வது இடம்

Published On 2019-06-27 11:30 GMT   |   Update On 2019-06-27 11:30 GMT
உலகக்கோப்பை தொடரில் பவர்பிளே-யான முதல் 10 ஓவரில் இந்தியா பேட்டிங்கில் 4.32 சராசரியுடன் மிகமிக மோசமாக உள்ளது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்தில் கோடைக்காலம் என்பதால் ஆடுகளங்கள் அனைத்தும் பிளாட்டாக இருக்கும். பேட்ஸ்மேன்கள் அதிக அளவில் ரன்கள் குவிப்பார்கள். ஒவ்வொரு போட்டியிலும் 300 ரன்களுக்கு மேல் அடித்தால் அது ஆச்சர்யமான விஷயம் கிடையாது. ஒருவேளை இங்கிலாந்து 500 ரன்னைத் தொடலாம் என்ற கருத்துக்கள் நிலவியது.

ஆனால் அன்சீசன் மழைக்காரணமாக ஆடுகளங்கள் சற்று ஈரப்பதமாக காணப்பட்டு வருகிறது. இதனால் முதல் 10 ஓவரில் ரன்கள் குவிக்க பேட்ஸ்மேன்கள் திணறி வருகிறார்கள்.



இதுவரை நடந்து முடிந்துள்ள போட்டிகளில் இலங்கைதான் முதல் 10 ஓவரில் சராசரியாக 6.63 ரன்கள் அடித்துள்ளது. வங்காள தேசம் 5.48 ரன்களுடன் 2-வது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா 5.10 ரன்களுடன் 4-வது இடத்தில் உள்ளது.

இந்தியா 4.32 ரன்களுடன் கடைசி இடத்திற்கு முந்தைய இடத்தில் உள்ளது. இங்கிலாந்து 5.34 ரன்களுடன் 3-வது இடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் 5.14 ரன்களுடன் ஐந்தாவது இடத்திலும், பாகிஸ்தான் 5.07 ரன்களுடன் 6-வது இடத்திலும், நியூசிலாந்து 5.02 புள்ளிகளுடன் 7-வது இடத்திலும், ஆப்கானிஸ்தான் 4.57 ரன்களுடன் 8-வது இடத்திலும் உள்ளன. தென்ஆப்பிரிக்கா 4.01 ரன்களுடன் கடைசி இடத்தில் உள்ளது.
Tags:    

Similar News