உலகம்

பழிக்குப் பழி.. ஹவுதிக்களை சும்மா விடமாட்டோம்- விமான நிலைய தாக்குதலால் கொந்தளித்த இஸ்ரேல் பிரதமர்

Published On 2025-05-05 11:19 IST   |   Update On 2025-05-05 11:19:00 IST
12CNI0505025: பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் கட்டுப்பாட்டில் உள்ள காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லை. தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே 2 ஆண்டுகளுக்கு மேலாக போர் நீடித்து வருகிறது. ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக ஈரானில் செயல்பட்

காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லை.  2 ஆண்டுகளுக்கு மேலாக போர் நீடித்து வருகிறது.

காசா போருக்கு எதிராக ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து இஸ்ரேலை தாக்கி வருகின்றனர்.  

நேற்று இஸ்ரேலின் 2-வது பெரிய நகரமாக திகழ்ந்து வரும் டெல்அவிவ் பென்குரியன் சர்வதேச விமான நிலையம் அருகே ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏமனில் இருந்து ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தினார்கள்.

போர் தொடங்கிய பிறகு இஸ்ரேல் விமான நிலையம் மீது அவர்கள் முதல் முறையாக இந்த தாக்குதலை நடத்தி உள்ளனர். இதில் சிலர் காயம் அடைந்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. விமான பயணிகள் மத்தியிலும் பீதி ஏற்பட்டது.

ஹவுதி கிளர்ச்சியாளர்களின் இந்த தாக்குதல் இஸ்ரேலுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இதுதொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெளியிட்ட வீடியோவில் கூறியதாவது:-

நாங்கள் கடந்த காலத்தில் அவர்களுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட்டோம். எதிர்காலத்திலும் செயல்படுவோம். இனி 1 முறை தாக்குதல் நடத்திவிட்டு ஓயமாட்டோம், தொடர் தாக்குதல் நடத்துவோம். நாங்கள் 2 பணிகளில் கவனம் செலுத்துகிறோம். ஒன்று ஹமாசை அழிப்பது, மற்றொன்று அவர்களிடம் இருந்து பிணைக்கைதிகளை பத்திரமாக மீட்பது. இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுப்போம் என ஹவுதி அமைப்பு தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News