உலகம்
பஹல்காம் தாக்குதலுக்கு பொறுப்பேற்ற TRF-ஐ பயங்கரவாத அமைப்பாக அறிவித்த அமெரிக்கா
- தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) பொறுப்பேற்றது.
- அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ அறிக்கை வெளியிட்டார்.
கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு சுற்றுலாத் தலத்தில் 4 பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தளமாக கொண்டு இயங்கும் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) பொறுப்பேற்றது.
இந்நிலையில் தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) அமைப்பை வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ வெளியிட்டுள்ள அறிக்கையில், "வெளியுறவுத்துறை, தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) ஐ ஒரு வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாகவும் (FTO), (லஷ்கர் தொய்பாவால்) நியமிக்கப்பட்ட உலகளாவிய பயங்கரவாதியாகவும் (SDGT) அறிவிக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.