உலகம்

மன்னர் சார்லஸ் இறந்ததாக வெளியான செய்தி வதந்தியே: தூதரகம் அறிக்கை

Published On 2024-03-19 10:01 GMT   |   Update On 2024-03-19 10:01 GMT
  • இங்கிலாந்து மன்னர் சார்லஸ் மரணமடைந்துள்ளதாக நேற்று தகவல் பரவியது.
  • இது ரஷியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் தீயாக பரவியது.

லண்டன்:

இங்கிலாந்து மன்னர் 3-ம் சார்லஸ் (75), புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வருகிறார் என கடந்த மாதம் பக்கிங்காம் அரண்மனை தெரிவித்தது.

இதற்கிடையே, ரஷிய ஊடகங்களில் நேற்று மதியத்திற்கு மேல் பிரிட்டன் மன்னர் சார்லஸ் மரணம் அடைந்ததாக தகவல் பரவியது. ரஷியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளிலும் இந்த தகவல் தீயாக பரவியது. இங்கிலாந்து அரச குடும்பத்தினர் அதிர்ச்சியில் உள்ளதாக தகவல் வெளியிட்ட ரஷிய ஊடகங்கள், மன்னர் சார்லஸ் குறித்த போலி புகைப்படங்களையும் இணைத்திருந்தன.

இதையடுத்து, தஜிகிஸ்தானில் முன்னணி செய்தி நிறுவனம் ஒன்று சார்லஸ் மன்னருக்கு இரங்கல் செய்தியும் வெளியிட்டது.

இந்நிலையில், இங்கிலாந்து தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மன்னர் சார்லஸ் இறந்துவிட்டதாக வெளியான தகவல் வெறும் புரளி. மன்னர் சார்லஸ் உயிருடன் இருக்கிறார் எனக்கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

Tags:    

Similar News