உலகம்

முன்னாள் அதிபர் டிரம்ப், பிரதமர் மோடி

பிரதமர் மோடி சிறப்பாக பணியாற்றி வருகிறார் - முன்னாள் அதிபர் டிரம்ப்

Published On 2022-09-09 00:37 IST   |   Update On 2022-09-09 00:37:00 IST
  • பிரதமர் மோடியுடனும், இந்தியாவிடமும் எனக்கு நல்ல உறவு இருந்தது என முன்னாள் அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
  • நானும் பிரதமர் மோடியும் நல்ல நண்பர்களாக இருந்தோம் என்றார்.

வாஷிங்டன்:

அமெரிக்கா முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

இந்தியாவுக்கு என்னை விட சிறந்த நண்பன் இருந்ததில்லை என்று நினைக்கிறேன். பிரதமர் மோடியுடனும், இந்தியாவிடமும் எனக்கு நல்ல உறவு இருந்தது. நாங்கள் நல்ல நண்பர்களாக இருந்தோம்.

பிரதமர் மோடி மிகச்சிறந்த நபர். அவர் சிறப்பாக பணிகளை செய்து வருகிறார். அவருக்கு கிடைத்திருக்கும் பொறுப்பு எளிதானது கிடையாது. ஒருவொருக்கொருவர் நீண்ட காலமாக அறிந்து இருக்கிறோம்.

நான் மீண்டும் அதிபர் பதவிக்கு வேண்டும் என்றே அனைவரும் விரும்புகின்றனர். தேர்தல்களிலும் நான் முன்னிலை வகிக்கிறேன். விரைவில் இது குறித்து நான் முடிவு எடுப்பேன் என தெரிவித்தார்.

2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் போட்டியிடுவாரா என்ற விவாதங்கள் எழுந்துவரும் சூழலில், அவரது பேட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Tags:    

Similar News