உலகம்
மோடி மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு.. எங்களுக்குள் நல்ல ஒப்பந்தம் ஏற்படும் - டிரம்ப்
- சுவிட்சர்லாந்தில் உலக பொருளாதார மாநாடு நடந்து வருகிறது.
- பிரதமர் மோடி ஒரு அற்புதமான மனிதர், எனது நண்பர்.
சுவிட்சர்லாந்தில் உலக பொருளாதார மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பங்கேற்று பேசினார்.
அப்போது செய்தியாளர்களிடம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறுகையில், தனது நண்பர் பிரதமர் மோடி மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பதாகவும், அவருடன் நல்ல வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள போவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில்,
உங்கள் பிரதமர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. அவர் ஒரு அற்புதமான மனிதர், எனது நண்பர். எங்களுக்கு ஒரு நல்ல ஒப்பந்தம் ஏற்படப் போகிறது என்று கூறினார்.
இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்த கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளார்.