உலகம்

அமெரிக்காவால் தான் கனடா உயிர் வாழ்கிறது - டிரம்ப் கடும் தாக்கு!

Published On 2026-01-22 16:25 IST   |   Update On 2026-01-22 16:25:00 IST
  • கனடாவை அமெரிக்காவின் ஒரு பகுதியாக காட்டும் AI படத்தை டிரம்ப் பகிர்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
  • பொருளாதார பலம் தற்போது ஆயுதமாக மாறியுள்ளதாக அமெரிக்காவை கனடா பிரதமர் சாடியிருந்தார்

கனடா நாட்டை அமெரிக்காவின் 51 ஆவது மகனாக இணைக்கவேண்டும் என்று டிரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

இதனிடையே கனடா, கிரீன்லாந்து மற்றும் வெனிசுலா நாட்டை அமெரிக்காவின் ஒரு பகுதியாக காட்டும் ஒரு AI படத்தையும் பகிர்ந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், அமெரிக்கா இருப்பதால்தான் கனடா இன்று உயிர் வாழ்ந்து வருவதாக டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.

பிற நாடுகளை அச்சுறுத்த பொருளாதார பலம் தற்போது ஆயுதமாக மாறியுள்ளதாக அமெரிக்காவை கனடா பிரதமர் சாடியிருந்த நிலையில், அமெரிக்காவிடம் இருந்து ஏராளமான இலவச சலுகைகளை பெறும் கனடாவுக்கு நன்றியுணர்வு இல்லை என்று டிரம்ப் விமர்சித்துள்ளார்.

Tags:    

Similar News