உலகம்

சிறிய அடுக்குமாடி குடியிருப்புக்கு மாதம் ரூ.2 லட்சம் வாடகை- இணையத்தில் விவாதத்தை ஏற்படுத்திய பதிவு

Published On 2024-03-12 04:06 GMT   |   Update On 2024-03-12 04:06 GMT
  • வீடியோ 30 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை குவித்து உள்ள நிலையில் பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
  • சில பயனர்கள் மோசமாக வடிவமைக்கப்பட்ட இந்த குடியிருப்புக்கு மாதம் ரூ.2 லட்சம் வாடகையா என விமர்சித்து வருகின்றனர்.

உலகம் முழுவதும் பெரிய நகரங்களில் குடியிருப்புகளின் வாடகை மிகவும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நியூயார்க்கில் உள்ள மன்ஹாட்டன் பகுதியில் உள்ள ஒரு சிறிய ஸ்டூடியோ அடுக்குமாடி குடியிருப்புக்கு ரூ.2 லட்சம் மாத வாடகை என பரவும் வீடியோ இணைய பயனர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

அந்த வீடியோவில் ஒரு கழிவறை இருக்கை வசதியற்ற முறையில் கை கழுவுதற்கு இல்லாமல் ஒரு பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. மிக சிறிய அடுக்குமாடி குடியிருப்பு என இன்ஸ்டாகிராமில் ரியல் எஸ்டேட் வியாபாரியான டேவிட் ஒகோச்சா என்பவரால் பகிரப்பட்ட இந்த வீடியோ 30 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை குவித்து உள்ள நிலையில் பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

சில பயனர்கள் மோசமாக வடிவமைக்கப்பட்ட இந்த குடியிருப்புக்கு மாதம் ரூ.2 லட்சம் வாடகையா என விமர்சித்து வருகின்றனர். ஒரு பயனர், நீங்கள் இதுவரை பார்த்திராத மிக மோசமான இடவடிவமைப்பு இதுதானா? என்று கேள்வி எழுப்பி உள்ளார். மற்றொரு பயனர், ஒரு நில உரிமையாளராக இது சட்டவிரோதமானது. இந்த நில உரிமையாளரை சிறையில் அடைக்க வேண்டும் என்று பதிவிட்டார். இதுபோன்று பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News