null
தொடங்கியது மூன்றாம் லெபனான் யுத்தம்.. இஸ்ரேலிடம் இருந்து தப்புமா?..வரலாறு கூறுவது என்ன?
- இஸ்ரேல் முழுவதும் சுமார் 270 பயங்கரவாத தாக்குதல்களை PLO மேற்கொண்டது.
- 15,000 முதல் 18,000 வீரர்களை கொண்ட PLO அமைப்பு லெபனான் முழுக்க பரவி இருந்தனர்.
இஸ்ரேல் - பாலஸ்தீனம்
பாலஸ்தீனம் மீது கடந்த 11 மாதங்களாக இஸ்ரேல் நடத்தி வருவதாக்குதலில் 40,000 க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர். இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் கொடுங்கோன்மையால் பாதிக்கப்பட்ட யூதர்கள் தங்களின் புராதன நிலமாகக் கருதப்படும் ஜெருசலேம் நகரம் அமைந்திருந்த பாலஸ்தீனத்துக்கு அடைக்கலம் தேடி வந்தனர். அவர்களை ஆதரித்து பாலஸ்தீன மக்கள் தங்கள் இடங்களில் அடைக்கலம் வழங்கினர். யுத்தம் முடிந்த 1945 க்கு பிறகு இவ்வாறு அடைக்கலம் புகுந்த யூதர்கள் ஏற்கவே அங்கு இருந்த யூத சமூகத்துடன் சேர்ந்து எண்ணிக்கையில் அதிகமாகிக்கொண்டே வந்தனர்.
இதனைத்தொடர்ந்து 1948 ஆம் ஆண்டு மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் பாலஸ்தீன பகுதிகள் பிரிக்கப்பட்டு இஸ்ரேல் என்ற நாடு உருவானது. இதனால் அங்கு வாழ்ந்து வந்த பாலஸ்தீன குடிகளான முஸ்லீம் மக்கள் கடும் பாதிப்பை சந்தித்தனர். எனவே இயல்பாகவே கிளர்ச்சிகள் எழத் தொடங்கின. அவ்வாறு உருவான கிளர்ச்சி அமைப்பே ஹமாஸ். பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்துக்கு இஸ்லாமியர்கள் நிறைந்த மத்திய கிழக்கு நாடுகளும் அங்கு இருந்த அமைப்புகளும் ஆதரவு வழங்கின.
முதல் லெபனான் யுத்தம்
பாலஸ்தீனத்தைத் தவிர்த்து அண்டை நாடான லெபனான் மீதும் இஸ்ரேலின் கண்கள் விழுந்தது. லெபனான் மீது தாக்குதல் நடந்த காத்திருந்த இஸ்ரேலுக்கு 1978 இல் அப்படி ஒரு வாய்ப்பு தானாக அமைந்தது. மார்ச் 1978 ஆம் ஆண்டில் லெபனானில் உருவாக்கப்பட்டு இயங்கி வந்த பாலஸ்தீன விடுதலை அமைப்பான PLO இஸ்ரேலுக்குள் ஊடுருவித் தாக்குதல் நடத்தியது. பொதுப் பேருந்தைக் கடத்திய கிளர்ச்சியாளர்கள் அதில் இருந் அமெரிக்கச் சுற்றுலாப் பயணி உட்பட 34 பேரைக் கொன்றனர். இதை உடனடி காரணமாக வைத்துப் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இஸ்ரேல் படைகள் லெபனானுக்குள் நுழைந்தது.
PLO அமைப்பினரின் தளவாடங்கள் அமைத்துள்ள லெபனானிய பகுதிகளை இஸ்ரேலிய படைகள் 2 மாதகாலமாக தாக்கி வந்தன. கடைசியாக ஐநா தலையீட்டுக்குப் பின்னர் தாக்குதலானது சற்று ஓய்ந்தது. எனினும் PLO மற்றும் இஸ்ரேலுக்கு இடையே உரசல்கள் வெடித்த வண்ணம் இருந்தன. எனவே 1981 ஜூலையில் அமெரிக்கா ஏற்படுத்திய போர் நிறுத்த ஒப்பந்தம் விரைவிலேயே மீறப்பட்டது.
இஸ்ரேல் முழுவதும் சுமார் 270 தாக்குதல்களை PLO மேற்கொண்டது. சுமார் 29 இஸ்ரலேயர்கள் உயிரிழப்புக்கு 300 பேர் படுகாயமடைவதற்கும் இந்த தாக்குதல் காரணமானது,, 15,000 முதல் 18,000 வீரர்களை கொண்ட PLO அமைப்பு லெபனான் முழுக்க பரவி இருந்த நிலையில் இஸ்ரேல் தாக்குதல் புள்ளியை தேர்ந்தெடுக்கமுடியாமல் திணறியது. இறுதியாக ஜூன் 1982 ஆம் ஆண்டு PLO அமைப்பினர் பிரிட்டனுக்கான இஸ்ரேல் தூதுவரை கொலை செய்ய முயன்றபோது நிலைமை கையைமீறி சென்றது.
கலீலி அமைதி என்ற ஆபரேஷனை ஜூன் 6 ஆம் தேதி இஸ்ப்பிரேல் தொடங்கிட்டது. இந்த ஆபரேஷன் மூலம் லெபனானில் நடந்த தாக்குதல்கள் பொதுமக்கள் உயிருக்கும் அச்சுறுத்தலாக மாறின. லெபனான் தெற்கு பகுதியில் உள்ள தலைநகர் பெய்ரூட் நகரை இஸ்ரேலிய படைகள் சுற்றி வளைந்தன.
ஆனால் சர்வதேச நாடுகள் தலையீட்டால் ஏற்பட்ட அமைதிப் பேச்சுவரத்தை மூலம் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. PLO அமைப்பினர் லெபானான் தளங்களில் இருந்து வெளியறிவது என்ற ஒப்பந்தம் எட்டப்பட்டது. ஆனாலும் இஸ்ரேலிய படைகளில் தாக்குதல்கள் ஆங்காங்கே தொடர்ந்தன.
செப்டமப்ர் 1 1982 இல் சுமார் 14,000 PLO வீரர்கள் துனிசியா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்றனர்.. இதில் PLO சேர்மேன் யாசர் அராபத்தும் அடங்குவார். தொடர்ந்து அப்போதைய இஸ்ரேல் பிரதமர் பதவி மெனாகெம் பேகின் பதவி விலகலைத் தொடர்ந்து 1984 இல் இஸ்ரேலிய படைகள் லெபனானில் இருந்து முழுவதுமாக பின் வாங்கின. இந்த போரில் சுமார் 19,000 லெபனான் மக்கள் உயிரிழந்தனர்.இந்த போருக்கு மத்தியில் எழுச்சி பெற்ற சியா முஸ்லீம் படையே ஹிஸ்புல்லா. போருக்கு மத்தியில் 1982 இல் உருவான ஹிஸ்புல்லா PLO அங்கு விட்டுச் சென்ற பணியை தற்போதுவரை தொடர்கிறது.
இரண்டாம் லெபனான் யுத்தம்
இடையே ௨௦௦௬ இல் ஹிஸ்புல்லாவுக்கு இஸ்ரேலுக்கும் இடையே வெடித்த மோதல் இரண்டாம் லெபனான் யுத்தமாக அறியப்படுகிறது. 2006, 12 ஜூலை – 14 ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் லெபனான் பகுதிகள், வடக்கு இஸ்ரேல், கோலோன் சிகரம், ஆகிய பகுதிகளில் இஸ்ரேலிய படைகளுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்ட நிலையில் மீண்டும் ஐநாவின் தலையீட்டால் இந்த மோதல் முடிவுக்கு வந்தது.
மூன்றாம் யுத்தம்
தற்போது காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் லெபனானில் இருந்து இஸ்ரேலிய பகுதிகள் மீது தாக்குதல் நடத்தியது. எனவே இதனால் கொந்தளித்த இஸ்ரேல் ஹிஸ்புல்லாவினரின் தொலைத்தொடர்பு சாதனங்களை வெடிக்க வைப்பது உள்ளிட்ட ரீதியாக தாக்குதல் நடத்திய நிலையில் தற்போது நேரடியாக சரமாரி ஏவுகணை தாக்குதல் நடத்தத் தொடங்கியுள்ளது .நேற்றைய இஸ்ரேல் தாக்குதலில் லெபனானில் 500 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனால் 1982 இல் நடந்ததைப் போல 2006 இல் நடந்ததை போல மூன்றாவது லெபனான் போர் உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அழிவு
முந்தய இரண்டு முறையும் ஐநா சண்டையை தீர்த்து வைத்தது. ஆனால் தற்போது ஐநாவின் தொடர் அறிவுறுத்தலையும் இஸ்ரேல் அலட்சியம் செய்து வருகிறத. எனவே இந்த முறை மனிதகுலம் பெருமையாக தத்தமது நாடுகளின் உருவாக்கி வைத்திருக்கும் மேம்பட்ட அழிவுக் கருவிகள் மூலம் கடந்த நூற்றாண்டைவிட அதிக அழிவுகள் இருக்கும் என்பதே சர்வதேச சமூகத்தின் அச்சமாக மாறியுள்ளது.