உலகம்

தாய்லாந்தின் ராஜமாதா காலமானார்..

Published On 2025-10-25 10:45 IST   |   Update On 2025-10-25 10:50:00 IST
  • ராஜமாதா சிரிகிட் உடைய பிறந்தநாள் அந்நாட்டில் அன்னையர் தினமாக கொண்டாடப்பட்டு பொது விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.
  • தனது 18 வயதில் மன்னர் பூமிபால்-ஐ அவர் சிரிகிட் திருமணம் செய்து கொண்டார்.

தாய்லாந்தின் தற்போதைய மன்னர் வஜிராலங்கார்னின் தாயாரான ராஜமாதா சிரிகிட் (Queen Mother Sirikit) உடல்நலக்குறைவால் காலனமார். அவருக்கு வயது 93.

ராஜமாதா சிரிகிட், தாய்லாந்தை மிக நீண்ட காலம் ஆட்சி செய்த மன்னரான பூமிபால் அதுல்யதேஜின் மனைவியாவார்.

அக்டோபர் 17 ஆம் தேதி முதல் இரத்தத் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 9.14 மணியளவில் பாங்காக்கில் உள்ள சுலாலோங்கார்ன் மருத்துவமனையில் காலமானார் என்று இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

 அவரது உடல், இறுதிச் சடங்கு வரை பாங்காக்கில் உள்ள கிராண்ட் பேலஸில் வைக்கப்பட உள்ளது.

1932 ஆகஸ்ட் 12 பிறந்த ராஜமாதா சிரிகிட் உடைய பிறந்தநாள் அந்நாட்டில் அன்னையர் தினமாக கொண்டாடப்பட்டு பொது விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.

தனது 18 வயதில் மன்னர் பூமிபால்-ஐ அவர் சிரிகிட் திருமணம் செய்து கொண்டார். கடந்த 2016 இல் பூமிபால் காலமான பின் இவர்களது மகன் வஜிராலங்கார்ன் மன்னராக முடிசூடினார்.

2012 முதல் சிரிகிட் பொதுவெளியில் அதிகம் தோன்றாமல் இருந்து வந்தார். தாய்லாந்தில் கிராமப்புற மேம்பாடு பெண்களின் கைவினை தொழில்களுக்கு உதவுதல், சுற்றுசூழல் குறித்த விழிப்புணர்வு மற்றும் பல்வேறுநலத்திட்ட பணிகளை சிரிகிட் மேற்கொண்டு வந்தார்.   

Tags:    

Similar News