உலகம்

உக்ரைன் மீது ரஷியா ஏவுகணைத் தாக்குதல்..16 பேர் பலி - பலர் படுகாயம்

Published On 2025-06-25 02:00 IST   |   Update On 2025-06-25 02:01:00 IST
  • சுமி பகுதியில் நடந்த டிரோன் தாக்குதலில் ஐந்து வயது குழந்தை உட்பட மூன்று பேர் கொல்லப்பட்டனர்.
  • நேட்டோ உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளும் மேற்கத்திய நாடுகளின் தலைவர்களை ஜெலென்ஸ்கி சந்திக்க உள்ளார்.

உக்ரைனில் ரஷிய ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதலில் 16 பேர் கொல்லப்பட்டனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.

செவ்வாய்க்கிழமை பிற்பகல் ரஷிய தாக்குதலில் டினிப்ரோவில் ஏழு பேரும், சமரில் இரண்டு பேரும் கொல்லப்பட்டனர். வடகிழக்கு உக்ரைனின் சுமி பகுதியில் நடந்த டிரோன் தாக்குதலில் ஐந்து வயது குழந்தை உட்பட மூன்று பேர் கொல்லப்பட்டனர்.

முன்னெச்சரிக்கையாக மாஸ்கோவின் இரண்டு முக்கிய விமான நிலையங்களான வுனுகோவோ மற்றும் ஷெரெமெட்டியோவில் விமானப் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக ரஷியாவின் விமானப் போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது.

இதற்கிடையே உக்ரைனில் இருந்து வந்த 20 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷிய விண்வெளி பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ரஷியாவின் ஆக்கிரமிப்பை எதிர்கொள்ள உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி மேற்கத்திய நாடுகளின் இராணுவ உதவியை மேலும் நாடியுள்ளார்.

நெதர்லாந்தின் ஹேக்கில் நடைபெறும் நேட்டோ உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளும் மேற்கத்திய நாடுகளின் தலைவர்களை ஜெலென்ஸ்கி சந்திக்க உள்ளார்.  

Tags:    

Similar News