உலகம்

பாகிஸ்தானில் இருந்து அரிசி இறக்குமதி செய்ய தடை விதிக்கப்படும்: ரஷியா எச்சரிக்கை

Published On 2024-04-23 03:16 GMT   |   Update On 2024-04-23 03:16 GMT
  • பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அரிசியில் `மெகாசீலியா ஸ்கேலாரிஸ்' என்ற நுண்ணுயிர் கண்டறியப்பட்டது.
  • சுகாதார பாதுகாப்பு காரணங்களுக்காக கடந்த 2019-ம் ஆண்டிலும் பாகிஸ்தானில் இருந்து அரிசி இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டது.

மாஸ்கோ:

பாகிஸ்தானில் இருந்து ரஷியாவுக்கு அதிகளவில் அரிசி ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதன்படி கடந்த நிதியாண்டில் மட்டும் சுமார் 40 லட்சம் டன் அளவுக்கு அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது. எனவே பாகிஸ்தான் பொருளாதாரத்தில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்தநிலையில் பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அரிசியில் `மெகாசீலியா ஸ்கேலாரிஸ்' என்ற நுண்ணுயிர் கண்டறியப்பட்டது. இது ரஷியாவின் உணவு பாதுகாப்பு தரத்தை மீறுவதாக குற்றம் சாட்டப்பட்டது. எனவே பாகிஸ்தான் தூதரை அழைத்து இது தொடர்பாக கடும் ரஷியா கடும் கண்டனம் தெரிவித்தது.

மேலும் இதேநிலை தொடர்ந்தால் பாகிஸ்தானில் இருந்து அரிசி இறக்குமதி தடை செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. சுகாதார பாதுகாப்பு காரணங்களுக்காக கடந்த 2019-ம் ஆண்டிலும் பாகிஸ்தானில் இருந்து அரிசி இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News