உலகம்

பஹல்காம் தாக்குதலை குறிப்பிடவில்லை.. ஷாங்காய் மாநாட்டு கூட்டறிக்கையில் கையெழுத்திட மறுத்த ராஜ்நாத் சிங்

Published On 2025-06-27 06:38 IST   |   Update On 2025-06-27 06:38:00 IST
  • ஷாங்காய் பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாட்டுக்காக ராஜ்நாத் சிங் சீனா சென்றார்.
  • பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் மற்றும் சீன பாதுகாப்பு அமைச்சர் டோங் ஜுன் ஆகியோரும் மாநாட்டில் பங்கேற்றனர்.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் பற்றி குறிப்பிடாததால், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) கூட்டு அறிக்கையில் கையெழுத்திட பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மறுத்துள்ளார்.

ஷாங்காய் பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாட்டுக்காக ராஜ்நாத் சிங் சீனா சென்றுள்ள நிலையில் பாகிஸ்தானால் ஆதரிக்கப்படும் எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்த இந்தியாவின் கவலைகள் வெளிப்படையாகக் கவனிக்கப்படவில்லை என்ற அடிப்படையில் அவர் கையெழுத்திட மறுத்துள்ளார்.

ராஜ்நாத் சிங் கையெழுத்திட மறுத்ததைத் தொடர்ந்து, சீனாவில் நடைபெற்ற S.C.O. பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாடு நேற்றுடன் கூட்டு அறிக்கை இல்லாமல் முடிந்தது.

மாநாட்டில் உரையாற்றிய ராஜ்நாத் சிங், "பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை தொடர்ந்து ஆதரிப்பதாகக் கூறினார். பயங்கரவாதிகள், அவர்களின் ஆதரவாளர்கள் மற்றும் நிதி வழங்குபவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும். இந்தியா தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ள உரிமை உண்டு.

பயங்கரவாதத்தின் மையங்கள் இனி பாதுகாப்பாக இல்லை என்பதை நாங்கள் நிரூபித்துள்ளோம். அவற்றை குறிவைக்க இனி தயங்க மாட்டோம்" என்று கூறினார்.

பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் மற்றும் சீன பாதுகாப்பு அமைச்சர் டோங் ஜுன் ஆகியோரும் மாநாட்டில் பங்கேற்றனர். 

Tags:    

Similar News