உலகம்

(கோப்பு படம்)

உக்ரைன் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்- புதினிடம் தொலைபேசி மூலம் வலியுறுத்தினார் பிரதமர் மோடி

Published On 2022-07-01 11:46 GMT   |   Update On 2022-07-02 11:24 GMT
  • பல்வேறு சர்வதேச விவகாரங்கள் குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்தனர்.
  • இருநாடுகளுக்கு இடையேயான வர்த்தகத்தை மேலும் ஊக்குவிப்பது குறித்து ஆலோசனை.

பிரதமர் மோடி இன்று ரஷிய அதிபர் புதினுடன் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்த பேச்சுவார்த்தையின்போது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் புதின் இந்தியா வந்த போது இரு நாடுகள் இடையே மேற்கொள்ளப்பட்ட முடிவுகளை நிறைவேற்றப்படுவது குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.

வேளாண் பொருட்கள், உரம் மற்றும் மருந்து பொருட்கள் தொடர்பான இருநாடுகளுக்கு இடையேயான வர்த்தகத்தை மேலும் ஊக்குவிப்பது குறித்து கருத்து இரு தலைவர்களும் ஆலோசனை மேற்கொண்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சர்வதேச எரிசக்தி தேவை மற்றும் உணவு சந்தைகளின் நிலைமை உள்ளிட்ட பல்வேறு சர்வதேச விவகாரங்கள் குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்தனர்.

மேலும் பல்வேறு சர்வதேச மற்றும் இருதரப்பு விவகாரங்கள் குறித்து அடிக்கடி பேச்சுவார்த்தை நடத்தவும் இருதலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.

உக்ரைனின் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மற்றும் தூதரக ரீதியில் தீர்வு காண வேண்டும் என்ற இந்தியாவின் நீண்டகால நிலைப்பாட்டை பிரதமர் மோடி அப்போது புதினிடம் வலியுறுத்தியதாக மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.

Tags:    

Similar News